கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் கற்களை வீசியதில் பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாரவில தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் மாரவில ஹொரகொல்ல பகுதியில் நேற்று (14) இடம்பெற்றுள்ளது.இந்தக் கல் வீச்சுத் தாக்குதலால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பேருந்து மீது கற்களை வீசிவிட்டு தப்பிச் சென்ற இருவரை மாரவில தலைமையக பொலிஸார் அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
