இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் அழகை பார்த்து மட்டும்தான் காதலிப்பார்களாம்… இவங்ககிட்ட உஷாரா இருங்க..!

செய்திகள்

காதல் என்று வரும்போது அழகான தோற்றத்தை விட அன்பான இதயமே மகிழ்ச்சிகரமான உறவிற்கு முக்கியமானது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான மக்கள் வெளித்தோற்றத்தை தேர்ந்தெடுக்கும் தவறைத்தான் செய்கிறார்கள். அழகான வெளித்தோற்றம் தற்காலிக மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் அன்பான


இதயமே ஆயுள் முழுவதும் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இதுதான் உண்மை என்று தெரிந்தாலும் வெளித்தோற்றத்தின் கவர்ச்சியை மறுக்க முடியாத சிலர் உள்ளனர்.ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் கவர்ச்சிகரமான தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். தங்களின் தவறை இவர்கள் வாழ்க்கையின் பிற்பகுதியிலேயே உணர்வார்கள்.

விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்கள் கனிவான இதயம் கொண்ட ஆன்மாக்களை விரும்புகிறார்கள். ஆனால் இவை அழகான உடலுக்குள் வேண்டுமென்று விரும்புகிறார்கள். அன்பான இதயம், அழகான உடல் இரண்டில் எது வேண்டுமென்றால் அவர்கள் அழகான உடலைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். இருப்பினும், அவர்கள் நாளடைவில் தங்கள் துணை மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்குவார்கள். இது இறுதியில் பிரிவுக்கு வழிவகுக்கும். அவர்கள் ஒருவரை திருமணம் செய்ய விரும்பும்போது அவர்கள் மிகவும் கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவர்களையே விரும்புகிறார்கள்.


மகரம்மகர ராசிக்காரர்கள் எப்போதும் தங்களைப் பற்றிய உயர்ந்த அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளார்கள், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில், சமூகத்தில் தங்கள் நிலையை உயர்த்தும் கவர்ச்சிகரமான ஆளுமை மற்றும் தோற்றம் உள்ளவர்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்கள் ஒருவரின் கனிவான இதயத்தை மதிக்கிறார்கள், ஆனால் அழகான முகத்தை மட்டுமே காதலிக்கிறார்கள். அவர்கள் பணம், அந்தஸ்து போன்றவற்றை பெரிதாக நினைக்க மாட்டார்கள், ஆனால் உடல் அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

மேஷம்அனைத்து ராசிகளை விடவும் அதிக ஆர்வமும், விடாமுயற்சியும் கொண்டவர்கள் மேஷ ராசிக்காரர்கள். இருப்பினும், இந்த ராசிக்காரர்கள் தங்களுக்கென சில தனிப்பட்ட குறைகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சமூகத்தில் அவர்களின் நிலையை உயர்த்த நன்மை பயக்கும் என்று நினைப்பவர்களிடம் தீவிரமாக ஈர்க்கப்படுகிறார்கள். அவர்கள் ஆளுமைப் பண்புகளின் அடிப்படையில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில்லை, மாறாக கவர்ச்சிகரமான நபர்களுடன் பழகுவதை விரும்புகிறார்கள்.


கன்னி ராசிக்காரர்கள் அறிவார்ந்தவர்களிடம் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்கள் தற்காலிக டேட்டிங்கிற்கு கவர்ச்சிகரமான நபர்களை விட புத்திசாலிகளை விரும்புகிறார்கள், ஆனால் அவர்கள் ஒருவருடன் நீண்ட காலம் டேட்டிங் செய்ய விரும்பினால், அவர்கள் எப்போதும் அழகானவர்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பான எதிர்காலத்திற்கான திட்டங்களை தங்கள் அழகான துணையுடன் சேர்ந்து உருவாக்க விரும்புகிறார்கள்.