பிரியாணி இலையை இந்த மாதிரி எரிச்சால் பணம் அதிகம் சேருமாம்..!! முயற்சி செய்து பாருங்கள்.!!

செய்திகள்

சமையலறையில் உள்ள பல மசாலா பொருட்கள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்றி, வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்கும் திறன் கொண்டவை. இந்த மசாலா பொருட்களை சரியான வழியில் ஒருவர் தங்களின் வீட்டில் பயன்படுத்தி வந்தால், வீட்டில் உள்ள பிரச்சனைகளை நீக்குவதோடு, நிதி நிலையை அதிகரிக்கலாம். அப்படிப்பட்ட ஒரு மசாலா பொருள் தான் பிரியாணி இலை.


பிரியாணி இலை நீண்ட காலமாக செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு வருகிறது. பல கலாச்சாரங்களில், பிரியாணி இலை பணத்தை ஈர்க்கும் ஒரு மந்திர இலையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் பிரியாணி இலையில் உள்ள வலுவான மணம் தான். ஏனெனில் செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவி நல்ல வாசனை நிறைந்த பொருட்களில் குடியிருப்பாள். எனவே இந்த இலையை வீட்டில் பயன்படுத்தும் போது லட்சுமி தேவி நம் வீட்டிற்கு குடிபுகுந்து, வீட்டின் நிதி நிலை மேம்படும் என்பது நம்பிக்கை.

பிரியாணி இலை வீட்டில் பணத்தை அதிகம் சேர உதவுவதோடு, வீட்டில் உள்ள பல பிரச்சனைகளை களைய உதவுகின்றன. இப்போது செல்வம் பெருக, பிரச்சனைகள் குறைய பிரியாணி இலையை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதைக் காண்போம்.இதைக் குறைக்க தினமும் 2 பிரியாணி இலையை எரித்து அதன் புகையை வீட்டைச் சுற்றி காட்டுங்கள். இதனால் தம்பதிகளுக்கு இடையே வரும் சண்டைகள் குறைந்து, வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.

கண் திருஷ்டி விலகஉங்கள் வீட்டில் உள்ளோர் மீதான கண் திருஷ்டியை போக்க வேண்டுமானால், பிரியாணி இலை அதற்கு பெரிதும் உதவி புரியும். அதற்கு 7 பிரியாணி இலைகளை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் உப்பையும் எடுத்து, தலைக்கு மேல் 7 முறை சுற்ற வேண்டும். இந்த செயலை யாரிடமும் சொல்லாமல், வீட்டின் வெளியே தூக்கி எறிந்துவிட வேண்டும். இப்படி செய்தால், கண் திருஷ்டி விலகும்.

பணம் அதிகரிக்கஉங்கள் வீட்டில் தேவையில்லாத செலவுகள் அதிகமாக ஏற்படுகிறதா? உங்கள் கையில் பணம் நிற்பதில்லையா? அப்படியானால் வெள்ளிக்கிழமை ஒரு பிரியாணி இலையை எடுத்து அதை லட்சுமி தேவியின் பாதங்களில் வைத்து, பணம் எப்போதும்


கையில் நிலைத்திருக்க வேண்டும் என்று மனதில் வேண்டி, பின் அந்த பிரியாணி இலையை பணம் வைக்கும் பர்ஸில் வைத்துக் கொள்ளுங்கள்.இப்படி செய்வதால், பணப் பிரச்சனை ஏற்படாது மற்றும் கையில் எப்போதும் பணம் நிலைத்திருக்கும். இது தவிர, பிரியாணி இலையை எடுத்து, அதன் மேல் உங்கள் ஆசைகளை எழுதி, அதன் பின் அதை எரித்தால், அந்த ஆசை நிறைவேறுமாம்.

தொழிலில் வெற்றி காணநீங்கள் ஏதேனும் ஒரு முக்கியமான வேலையை செய்யப் போகிறீர்களா? அந்த வேலையில் எந்த தடையும் ஏற்படக்கூடாது என்று நினைத்தால், சனிக்கிழமைகளில் 5 பிரியாணி இலைகளை எடுத்து, அத்துடன் 5 மிளகையும் எடுத்து, எரித்துவிடுங்கள். இப்படி செய்வதால், உங்களைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி, உங்களின் வேலையில் இருக்கும் தடைகளும் நீங்கும்.


கெட்ட கனவுகளை தடுக்கதினமும் கெட்ட கனவுகள் உங்கள் தூக்கத்தை கெடுக்கிறதா? உங்களால் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியவில்லையா? அப்படியானால் நீங்கள் தூங்கும் முன், ஒரு பிரியாணி இலையை தலையணைக்கு கீழ் வைத்து தூங்குங்கள். இதனால் கெட்ட கனவுகள் வருவது நின்றுவிடும்.