வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது சில சமயங்களில் கிரக சேர்க்கைகளால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில், அதுவும் தமிழ் புத்தாண்டு அன்று மங்களகரமான ராஜயோகம் உருவாகவுள்ளது. அது தான் புதாதித்ய ராஜயோகம். இந்த ராஜயோகமானது புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் உருவாகும்.

புத்திகாரகனான புதன் ஏற்கனவே மார்ச் மாதத்தின் இறுதியில் மேஷ ராசிக்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசிக்கு செல்கிறார். இதனால் மேஷ ராசியில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. முக்கியமாக இந்நாளில் தான் தமிழ் புத்தாண்டான சோபகிருது வருடம் பிறக்கிறது. பொதுவாக யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
ஆனால் தமிழ் புத்தாண்டு அன்று மேஷ ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்கள் நல்ல செல்வத்தை பெறுவதோடு, அதிர்ஷ்டமும் பிரகாசிக்கப் போகிறது. இப்போது எந்த ராசிக்காரர்கள் புதாதித்ய ராஜயோகத்தால் நற்பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாவதால், கடக ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. எதிரிகளை இக்காலத்தில் வெற்றி பெறுவீர்கள்.குடும்ப சூழல் நன்றாக இருக்கும். நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். வியாபாரிகள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள் மற்றும் நல்ல லாபத்தைக் காண்பார்கள். இக்காலத்தில் உங்கள் தந்தையின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்துலாம் ராசியின் 7 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலமானது சாதகமாக இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும்.
தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும் மற்றும் அவருடன் நிறைய நேரத்தை செலவிடுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம். கூட்டு தொழில் தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 14 முதல் அதிர்ஷ்டமானதாக இருக்கும். எந்த ஒரு காரியத்திலும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்வத்ற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.