இந்த ஆண்டு 2023 ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசிக்கு செல்கிறார். இதனால் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி பிறக்கிறது. 2023 சோபகிருது புத்தாண்டின் போது கிரகங்களின் நிலைகளால் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளது. அதில் சில ராசிக்காரர்கள் நற்பலனையும், சில ராசிக்காரர்கள் கெடு பலனையும் பெறலாம். இப்போது 2023 சோபகிருது தமிழ் புத்தாண்டில் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்கள் என்னவென்பதைக் காண்போம்.

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு சோபகிருது வருடமானது தொழிலில் நல்ல மாற்றத்தைத் தரக்கூடிய ஆண்டாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இந்த ஆண்டில் பல பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். திருமணமாகாதவர்களுக்கு இந்த ஆண்டில் திருமணம் நடப்பதற்கான வாய்ப்புள்ளது.
ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு சோபகிருது ஆண்டானது கலவையான பலன்களைத் தரும். ஆரோக்கிய பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்க நேரிடும். தாய் தந்தையின் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு நன்றாக இருக்கும். கலைத் துறையில் இருப்பவர்களின் செல்வாக்கு இந்த ஆண்டு அதிகரிக்கும். முக்கியமாக நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு சோபகிருது ஆண்டானது நல்ல ஏற்றத்தைத் தரும் ஆண்டாக இருக்கும். மாணவர்கள் இந்த ஆண்டில் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். திருமணமான தம்பதிகளுக்கு இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். காதலிப்பவர்களின் காதல் பெற்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்படலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கடகம்கடக ராசிக்காரர்களுக்கு சோபகிருது ஆண்டானது குருவின் அருளால் சிறப்பாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் மரியாதை அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது மற்றும் பதவி உயர்வுகளும் கிடைக்கலாம். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தாய்வழி உறவால் நல்ல நன்மைகள் கிடைக்கும்.
சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு சோபகிருது ஆண்டானது நல்ல சிறப்பான மற்றும் முன்னேற்றத்தைத் தரும் ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டில் நீங்கள் செய்யம் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த ஆண்டு நன்றாக இருக்கும். மனதில் இருந்த கஷ்டங்கள் குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இடமாற்றத்திற்கான வாய்ப்புள்ளது. ஆனால் இந்த ஆண்டில் கோபத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு சோபகிருது ஆண்டானது தொழிலில் ஏற்றத்தைத் தரும் ஆண்டாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் குறையும். நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் தவிக்கும் தம்பதிகளுக்கு இந்த ஆண்டில் குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து, திருமணம் நடக்க வாய்ப்புள்ளது.
துலாம்துலாம் ராசிக்காரர்களுக்கு சோபகிருது ஆண்டு ஒரு திருப்புமுனையாக இருக்கும். இந்த ஆண்டில் வாழ்க்கையை மாற்றக்கூடிய பல சுப காரியங்கள் நடக்கும். வீடு, வாகனம், ஆபரணங்கள் போன்றவை வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் தங்கள் குழந்தைகள் மீது சந்தேகப்படுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைகளுடனான உறவு பாதிக்கப்படும். திருமணமான தம்பதிகளுக்கு இடையே காதல் அதிகரிக்கும்.

விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்களுக்கு சோபகிருது ஆண்டில் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசியலில் இருப்பவர்கள் இந்த ஆண்டில் ஒரு நல்ல பதவியைப் பெறலாம். உங்களின் புகழ் இந்த ஆண்டில் அதிகரிக்கும். விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த ஆண்டில் சுப செலவுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.
தனுசுதனுசு ராசிக்காரர்கள் சோபகிருது ஆண்டில் அதிகமாக பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த ஆண்டில் பல சுப செய்திகளைப் பெறுவீர்கள். சுபசெலவுகளுக்கான வாய்ப்புகளும் உள்ளன. பணிபுரிபவர்களுக்கு அலவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி வெற்றிகரமாக நடக்கும். பெற்றோர்களுடன் இருந்த பிரச்சனைகள் இந்த ஆண்டில் நீங்கி, அன்பு அதிகரிக்கும்.
மகரம்மகர ராசிக்காரர்கள் சோபகிருது ஆண்டில் தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்கும்ப ராசிக்காரர்கள் சோபகிருது ஆண்டில் தடைகளை உடைத்தெறிவார்கள். இதுவரை சுபகாரியங்களில் சந்தித்த தடைகள் நீங்கும். கணவன மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி, பிணைப்புகள் அதிகரிக்கும். மேலும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகள் நல்ல ஏற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் நல்ல பாராட்டைப் பெற வைக்கும்.
மீனம்மீன ராசிக்காரர்கள் சோபகிருது ஆண்டில் கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். தொழிலில் நல்ல ஏற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு இடமாற்றத்திற்கான வாய்ப்புள்ளது. வேலை மாற்றத்திற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். அரசு வேலைக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கக்கூடும்.Source:Boldsky