கோழி இறைச்சி விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு.!!

செய்திகள்

பண்டிகை காலத்தை முன்னிட்டு பல பொருட்களின் விலைகள் குறைக்கபடும் அதேவேளை சில பொருட்களின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.இந்நிலையில் சந்தையில் கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 1350 ரூபாவுக்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.இருப்பினும் பண்டிகை காலம் என்பதால் கோழிக்கறி தட்டுப்பாடு காரணமாக விலை உயர வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்..