பொலித்தீன் பைகள் பயன்படுத்துபவர்களுக்கு வெளியான முக்கிய செய்தி.!

செய்திகள்

பொலித்தீன் பைகளுக்காக நுகர்வோரிடம் கட்டணம் அறவிடும் வகையில் சட்டத்திருத்தத்தை மேற்கொள்வதற்கு சுற்றாடல் அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார்.


சிறப்பு அங்காடிகளில் கொள்வனவு செய்யப்படும் பொருட்களை கொண்டு செல்வதற்காக வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்காக நுகர்வோரிடம் கட்டணம் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சிறப்பு அங்காடிகளில் பொருட்களை கொள்வனவு செய்யும்

போது கட்டுப்பாட்டை மீறி பொலித்தீன் பைகள் விநியோகிக்கப்படுகின்றன.இதன் காரணமாக சுற்றாடலுக்கு பாரிய பாதிப்பு ஏற்படுகின்றது. இவற்றை கருத்திற்கொண்டே சட்டத் திருத்தத்தை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.