அட்சய திருதியை முதல் இந்த 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுதாம்..!!

செய்திகள்

புனித நாளாக கருதப்படுகிறது. இந்த நன்னாளில் தங்கம் வாங்குவது நல்லதாக கருதப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு அட்சய திருதியை நாளானது ஏப்ரல் 22 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் லட்சுமி தேவி மற்றும் நாராயணனை வழிபட்டால், வீட்டில் செல்வம் பெருகுவதோடு, மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.


ஜோதிடத்தின் படி, இந்த ஆண்டு அட்சய திருதியை அன்று 6 அற்புதமான சுப யோகங்கள் உருவாகின்றன. அவை ஆயுஷ்மான் யோகம், திரிபுஷ்கர் யோகம், சௌபாக்ய யோகம், சர்வார்த்த சித்தி யோகம், ரவி யோகம் மற்றும் அமிர்த யோகம் போன்றவை ஆகும்.இந்த மங்களகரமான யோக காலத்தில் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்கினால், அந்த ஆண்டு முழுவதும் வீட்டில் செல்வம் பெருகும் என சாஸ்திரம் கூறுகிறது. இப்போது வருகிற அட்சய திருதியை எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. இந்நாளில் உங்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கிடைப்பதோடு, உங்களின் நீண்ட நாள் ஆசைகளும் நிறைவேறப் போகிறது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சி நிறைந்தும் இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தையும், வெற்றியையும் காண்பார்கள்.


மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. இந்த அட்சய திருதியையால் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். வேலையில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் வருமானத்தில் உயர்வைக் காணலாம். பதவி உயர்வைப் பெறவும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

கடகம்கடக ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை சிறந்த நாளாக இருக்கும். இக்காலத்தில் உங்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை நற்பலன்களை வாரி வழங்கலன்னது. பல வழிகளில் இருந்து நற்செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்வின் பொருளாதார நிலை உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.


மீனம்மீன ராசிக்காரர்கள் இதுவரை வேலை தேடிக் கொண்டிருந்தால், அட்சய திருதியை தினத்தில் இருந்து நற்செய்திகள் வந்து சேரும். வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக இக்காலம் சிறப்பதக இருக்கும். நிதி நிலையும் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும். கடின உழைப்பிற்கான முழு பலன் கிடைக்கும்.