இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி தற்போது அனுமதியான கொடுப்பனவு!

செய்திகள்

அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர், எதிர்வரும் ஜூன் மாதம் முதல் புதிய திட்டத்தின் மூலம் நலன்புரி கொடுப்பனவை வழங்குவதற்கு நலன்புரி நன்மைகள் சபை நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் நலன்புரி கொடுப்பனவுகளுக்கு தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.


நாடளாவிய ரீதியிலுள்ள 340 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து நலத்திட்ட உதவித் தொகையை பெறுவதற்காக 3.7 மில்லியன் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நலத்திட்ட உதவித் தொகையை பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட 3.2 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மீதமுள்ள நலன்புரி கொடுப்பனவுகளுக்கான தகுதி சரிபார்ப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.Selva Sannithi Murugan Temple