நள்ளிரவில் தூக்கத்தில் இப்படியொரு அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்ட துண்டா..? கட்டாயம் படிங்க…!

செய்திகள்

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து திடீரென விழித்தும் கை கால்களை அசைக்க முடியாமல் இருப்பது, நெஞ்சின் மீது யாரோ அழுத்துவது போன்றிருப்பது, வாய் திறந்து பேச முடியாதிருப்பது போன்றதொரு அனுபவம் உங்களுக்கு இருந்ததுண்டா?பலர் அதனை அமுக்குவான் பிசாசு என அழைப்பார்கள். எனினும், நீங்கள் நினைப்பது போல் இதுவொன்றும் ஆத்மாவின் செயல் அல்ல.


இதனை ஆங்கிலத்தில் ஸ்லீப்பரலைசிஸ் என அழைப்பார்கள். இது ஏற்படுவதற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படாவிடிலும், தூக்கத்தின் ஒவ்வொரு படிநிலைகளின் போது எதிர்கொள்ளப்படும் சில சிரமங்கள் காரணமாக இந்த நிலைமை அடிக்கடி தோன்ற வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் இதன் போது பயக்கரமான கனவுகள், முகங்கள் மற்றும் சம்பவங்கள் என்பன தோன்றும்.

இதிலிருந்து எவ்வாறு விடுபடலாம்?அதிகளவு மதுசாரம் பருகுவதை தவிர்க்க வேண்டும்,ஒரே நேரத்தில் உறங்கப் பழகிக் கொள்ள வேண்டும்உடற்பயிற்சி செய்வதை வழமையாக்கிக் கொள்ள வேண்டும்.மிகவும் நேரம் பிந்தி இரவு உணவு உட்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.சத்தான ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும்.மன அமைதியை பேண வேண்டும். – © Tamilvoice.com | All Rights Reserved