சிவனுக்கு இந்த பொருளால் அபிஷேகம் செய்தால் பணம் வீடு தேடி வருமாம்..!!

ஆன்மீகம்

இந்துக் கடவுளுக்கு மக்கள் அபிஷகம் செய்வது வழக்கம். உதாரணத்திற்கு பிள்ளையார்க்கு எருக்கம் பூ மாலை மற்றும் அருகம் புல் இட்டு வழிபடுவார்கள்.அதேபோன்று சுண்டலை வைத்து வழிபடுவார்கள்.அம்மன் என்றால் கூழ் ஊற்றி வழிபடுவார்கள்.கும்பாபிஷ்கம் என்றால், பால் குடம் எடுத்து பால் அபிஷேகம் செய்வார்கள்.


இது போன்று பல உதாரணம் சொல்லிக்கொண்டே போகலாம்.அந்த வகையில் சிவபெருமானுக்கு, எந்தெந்த பொருள் கொண்டு அபிஷேகம் செய்தால், என்ன பலம் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.பசும் பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.தயிரால் ஈசனை அபிஷேகித்தால் – உடல் பலம், ஆரோக்கியம் ள்.

பசு நெய் – ஐஸ்வரியம்,கரும்புச் சாறு – தன விருத்தி,தேன் – தேகம் பொலிவு பெறும்.சர்க்கரை – துக்கம் விலகும்.புஷ்பங்கள் – பூலோக பாவம்.இளநீர் – சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.ருத்திராட்சம் – ஆனந்த வாழ்வு அமையும்.அரைத்து எடுத்த சந்தனம் – அபிஷேகித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.


சுத்தமான நீரினால் ஈசனை அபிஷேகம் செய்தால் இழந்த பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.வில்வத்தால் அபிஷேகம் – போக பாக்கியங்கள் வந்து சேரும்.அன்னம் -, தீர்க்காயுள், மோட்சம்.திராட்சைச் சாறு – அனைத்திலும் வெற்றி உண்டாகும்.பேரீச்சம்பழம் – எதிரிகள் விலகுவார்கள்.மாம்பழம் – தீராத வியாதிகள் நீங்கும்.மஞ்சள் கலந்த நீர் – மங்கலம்-Source: asianetnews