இலங்கையில் அடுத்த 36 மணிநேரத்துக்குள் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்..!!

செய்திகள்

அடுத்த 36 மணிநேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.முன்னறிவிப்பு இன்று மாலை 04.00 மணிக்கு வெளியிடப்பட்டது.மேல், சப்ரகமுவ, தென், ஊவா, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.


மேற்குறிப்பிட்ட பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசும்.மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.