ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்களா..? இவங்க கிட்ட ஜாக்கிரதையா இருக்கனுமாம்..!!

செய்திகள்

ஆண்டின் மிகவும் முக்கியமான மாதங்களில் ஒன்று ஏப்ரல் மாதமாகும். ஏனெனில் கோடைகாலம் தொடங்குவதில் இருந்து ஆண்டின் பல முக்கிய மாற்றங்களின் தொடக்கமாக இருப்பது ஏப்ரல் மாதம்தான். இந்த மாதத்தில் பிறந்தவர்களின் குணமானது மற்றவர்களிடம் இருந்து பல வேறுபாடுகளுடனும், தனித்துவத்துடனும் இருக்கும்.


ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்களை பற்றி சுருக்கமாக கூற வேண்டுமென்றால் அனைத்து உணர்ச்சிகளின் உச்சகட்டம்தான் இவர்கள். இவர்களுடைய ஒவ்வொரு செயலும் இவர்களை விட இவர்கள் உடனிருப்பவர்களுக்கு அதிக சுவாரஸ்யத்தை வழங்குவதாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் அவர்களின் நிறைகள் மற்றும் குறைகள் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

உணர்ச்சிமிக்கவர்கள்ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் அதிக உணர்ச்சிவசப்பட கூடியவர்களாக இருப்பார்கள். அதேசமயம் தன்னை சுற்றி இருப்பவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை இவர்களால் எளிதில் கண்டறிய முடியும். அதனால் இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு தூண்டுகோலாக இருப்பதுடன் தன்னுடைய அனுபவம் மூலம் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குவதிலும் சிறந்து விளங்குவார்கள். இவர்கள் சிறந்த வழிகாட்டியாக இருப்பார்கள்.

தைரியமானவர்கள்ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் துணிச்சல்மிக்கவர்களாகவும் எதற்கும் பயப்படாதவர்களாகவும் இருப்பார்கள். எந்தவொரு கடுமையான சூழ்நிலையிலும் இருக்கும் வாய்ப்பை காண்பவராக இவர்கள் இருப்பார்கள். இவர்களை பொறுத்தவரையில் ரிஸ்க் எடுத்து வாழ்க்கையில் எதுவும் செய்யவில்லை என்றால் அவர்கள் வாழ்க்கையில் எதையுமே சாதிக்கவில்லை என்று எண்ணம் கொண்டவர்கள்.


மயக்குதல்ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் அழகான தோற்றத்துடன் மட்டுமில்லாமல் வசீகரமும் கொண்டவர்களாக இருப்பார்கள். இது அவர்களை சுற்றி எப்பொழுதும் ஒரு கவர்ச்சிகரமான ஆராவை உருவாக்கும், குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் பிறந்த பெண்கள் பிறரை கவர்வதில் வல்லவர்கள். எனவே ஏப்ரல் மாதத்தில் பிறந்த ஒரு பெண்ணை பார்த்து நீங்கள் மயங்கினால் அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

நட்புக்கு முக்கியத்துவம்எந்தவொரு மனிதரும் நண்பர்கள் இன்றி வாழ்வது என்பது முடியாத ஒன்றாகும்.இதற்கு ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்களும் விதிவிலக்கல்ல. இவர்களை பொறுத்தவரையில் இவர்களுக்கு நண்பர்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாவார்கள். சொல்லப்போனால் உறவினர்களை விட நண்பர்களே இவர்களுக்கு முக்கியமானவர்கள்.

விளையாட்டில் ஆர்வம்ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்களுக்கு விளையாட்டில் அதிக ஆர்வம் இருக்கும். எந்தவொரு விளையாட்டாக இருந்தாலும் அதில் ஜெயிக்க வேண்டுமென்பதே இவர்களின் முதல் குறிக்கோளாக இருக்கும். சுவாரஸ்யம் இல்லாத வழக்கமான வாழ்க்கையை இவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.

காதல் வாழ்க்கைஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் அதிக உணர்ச்சிவசப்பட கூடியவராக இருப்பதால் அவர்கள் சரியான ஒரு காதல் வாழ்க்கையில் அதிக நம்பிக்கை கொண்டவராக இருப்பார்கள். இவர்கள் அவ்வளவு எளிதில் காதலில் விழமாட்டார்கள் அப்படி விழுந்து விட்டால் அதில் இறுதிவரை உறுதியாக இருப்பார்கள். காதல் கலையில் கைதேர்ந்த இவர்கள் தங்கள் துணையை ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முயலுவார்கள்.

பொறுமையற்றவர்கள்இவர்கள் பல தருணங்களில் பொறுமையற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கான முடிவை தெரிந்துகொள்ள அவர்கள் ஒருபோதும் பொறுமையாக இருக்கமாட்டார்கள். அவர்களின் பொறுமையின்மையால் அவர்களை சமாளிப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். இவர்களின் பொருமனையின்மைதான் இவர்களின் அனைத்து பிரச்சினைகளுகமான காரணாமாக இருக்கும். அவசரபடுதோயோ, கட்டாயப்படுத்தியோ ஒரு முடிவை உடனடியாக பெற முடியாது என்பது இவர்களுக்கு புரியாது.

அழிவை ஏற்படுத்தக்கூடியவர்கள்ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் அவர்களை ஆளும் கிரகத்தின் காரணமாக அழிவை ஏற்படுத்தக்கூடியவராக இருப்பார்கள். அவர்களின் முன்கோபத்தால் பல தருணங்களில் அவர்களை சமாளிப்பது மற்றவர்களுக்கு முடியாத காரியமாக இருக்கும். இதனால் மற்றவர்கள் இவர்களை முன்கோபி என்றும், சுயநலவாதி என்றும் எண்ணுவார்கள். இவர்களின் கோபத்தை மட்டும் கட்டுப்படுத்தி கொண்டால் இவர்களை விட இனிமையானவர்கள் யாருமில்லை.

மோசமான எதிரிகள்அவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர்கள் என்பதால் அவர்கள் அமைதியானவர்கள் என்று அர்த்தமல்ல. அவர்களை காயப்படுத்தினாலோ அல்லது அவர்களுக்கு துரோகம் செய்தாலோ வஞ்சம் வைத்து உங்களை பழிவாங்காமல் விடமாட்டார்கள். நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் அவர்கள் மிகவும் தீவிரமாக இருப்பார்கள்.-Source: boldsky