இந்த 6 ராசிகளில் பிறந்தவர்கள் எந்த சூழ்நிலையிலும் உங்களை விட்டு பிரியவே மாட்டார்கள்..!

செய்திகள்

உலகில் இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் அடிப்படையாக இருப்பது நம்பிக்கைதான். உறவில் ஒருவர் மீது ஒருவர் வைக்கும் நம்பிக்கைதான் அவர்களின் உறவை பாதுகாப்பதோடு பலப்படுத்தவும் செய்கிறது. மற்ற உறவுகளை காட்டிலும் காதலில் நம்பிக்கை மட்டும் இல்லையெனில் அந்த உறவு நீண்ட நாட்கள் தொடர முடியாது.


காதல் என்பதன் அர்த்தம் முற்றிலும் மாற்றிவிட்ட இந்த காலத்தில் உறவுகளுக்குள் நம்பிக்கை என்பது தேய்ந்து கொண்டே வருகிறது என்பது முற்றிலும் உண்மை. இருப்பினும் தனது துணைக்கு உண்மையாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு அவர்களின் ராசிகூட காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் தங்கள் துணைக்கு எப்போதும் உண்மையாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

ரிஷபம்ரிஷப ராசி மற்ற ராசிகளை விட அதிக பிடிவாதம் கொண்ட ராசியாகும், இதனால் அவர்கள் மீது பலருக்கும் கோபம் இருக்கும். ஆனால் காதலை பொறுத்தவரையில் எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் விட்டுவிடாத பிடிவாதம் இருப்பவர்கள்தான் சிறந்தவராக இருப்பார்கள். அந்த வகையில் ரிஷப ராசிக்காரர்கள் அந்த வேலையை சிறப்பாக செய்வார்கள். இவர்கள் மாற்றங்களை வெறுப்பார்கள், ஆரம்பித்த போது காதல் எப்படி இருந்ததோ அப்படியே சமநிலையில் இருக்க விரும்புவார்கள். தவறு இவர்கள் மேல் இல்லயென்றாலும் இறங்கி வந்து பேசி உறவை பாதுகாக்க தயங்கமாட்டார்கள்.

கடகம்இவர்களின் பழமை வாய்ந்த குணம் பலருக்கும் பிடிக்காமல் போகலாம் ஆனால் அதுதான் இவர்களை சிறந்த காதலராக மாற்றும். எவ்வளவு வேலை இருந்தாலும் தங்கள் துணைக்கான நேரத்தை ஒதுக்குவதில் இவர்கள் தவறமாட்டார்கள். இவர்கள் உறவுகளை விட எப்பொழுதும் காதலுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். தங்கள் துணையை விட்டு தொடர்ச்சியாக எட்டு மணி நேரம் இவர்களால் பிரிந்திருக்க இயலாது. எட்டு மணி நேரமே பிரிந்திருக்க முடியாது என்னும்போது இவர்கள் எப்படி தங்களை துணையை ஏமாற்றுவார்கள்.


கன்னிமற்ற அனைத்து ராசிகளை விடவும் கன்னி ராசிக்காரர்கள் தங்கள் துணைக்கு அதிக உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பார்கள் என்றாலே அது பொய்யல்ல. அவர்கள் தங்கள் வாழ்க்கைக்கென சில கோட்பாடுகளை வைத்திருப்பார்கள், எனவே அனைத்தையும் திட்டமிட்டு ஒழுங்காக செய்வார்கள். இது அவர்களின் காதல் வாழ்க்கைக்கும் பொருந்தும். இவர்களின் காதலில் ஒவ்வொரு நிலையும் இவர்கள் நினைத்து போலவே நடக்கும். தன் துணையுடன் எப்படிப்பட்ட அழகான வாழ்க்கையை வாழவேண்டுமென்று நினைக்கிறார்களோ அப்படியே வாழ்வார்கள்.

துலாம்இவர்கள் இயற்கையாகவே அமைதியான குணம் கொண்டவர்கள், மேலும் இவர்கள் தனிமையை எப்பொழுதும் விரும்பமாட்டார்கள். ஏமாற்றுவது என்பது இவர்கள் அகராதியிலேயே இருக்காது. ஒரே நேரத்தில் இரண்டு உறவுகளில் ஈடுபடுவது என்பது இவர்களுக்கு பிடிக்காத மற்றும் வராத ஒன்றாகும். தவறான காரியங்களை பிறருடன் செய்ய இவர்களின் மனசாட்சி ஒருபோதும் இவர்களை அனுமதிக்காது. எனவே நீங்கள் உங்கள் துலாம் ராசி காதலன்/காதலியுடன் தாராளமாக சண்டை போடலாம். உங்களை விட்டு அவர்கள் எங்கும் போய்விட மாட்டார்கள்.

கும்பம்இவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட கூடியவர்களாகவும், சத்தியத்தை உடைக்க விரும்பாதவர்களாவும் இருப்பார்கள். இவர்கள் ஒருபோதும் சத்தியத்தை மீறமாட்டார்கள் அதேசமயம் முடியாத காரியத்திற்கு சத்தியம் செய்யவும் மாட்டார்கள். இவர்கள் தங்கள் துணைக்கு உண்மையாகவும், செய்த சத்தியத்தை கடைபிடிக்கவும் முடிந்தவரை முயலுவார்கள், அதையே தங்கள் துணையிடமும் எதிர்பார்ப்பார்கள். ஒருவேளை இவர்கள் செய்த சத்தியத்தை மீறினால் அது அவர்கள் துணையின் தவறாகத்தான் இருக்கும். எனவே நீங்கள் உண்மையாக இருக்கும்வரை உங்களின் கும்ப ராசி துணையை பற்றிய அச்சம் உங்களுக்கு தேவையில்லை.

மீனம்இவர்கள் தன்னலமற்றவர்களாகவும், கருணை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் உலகம் எப்பொழுதுமே கொஞ்சம் வித்தியாசமானதாகும். அதில் காதலுக்கும், அமைதிக்கும் இடமிருக்கிறதே தவிர மோசடிக்கும், தவறுகளுக்கும் இடமில்லை. எனவே இவர்கள் ஒருபோதும் தங்கள் துணையை ஏமாற்ற முயலமாட்டார்கள் மாறாக காதலில் ஏற்படும் பிரச்சினைகளை இவர்களே தீர்த்து வைக்க முன்வருவார்கள். மீன ராசிக்கார்கள் காதலன்/காதலியாய் கிடைக்க யாராக இருந்தாலும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.-Source: boldsky