இத்தாலியில் வானத்தில் திடீரென தோன்றி மறைந்த மர்மமான சிவப்பு ஒளி!

செய்திகள்

இத்தாலியில் வானத்தில் கடந்த மாதம் ஒரு மர்மமான சிவப்பு ஒளி மில்லி விநாடிகளுக்கு தோன்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அதை அடையாளம் தெரியாத பறக்கும் பொருளாக இருக்குமோ என்று பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


குறித்த நிகழ்வு வானத்தில் மிக குறைவான காலத்திற்கே தோன்றியதன் காரணமாக, பலர் இந்த அரிய காட்சியை தவறவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், இயற்கை புகைப்படக் கலைஞர் வால்டர் பினோட்டோ மார்ச் 27 அன்று வடக்கு இத்தாலியில் உள்ள போசாக்னோ நகருக்கு மேலே வானத்தில் தோன்றிய ELVE எனப்படும் ஒளிரும் ஒளிவட்டத்தின் காட்சியைப் பிடித்துள்ளார்.