இன்று இல்லத்தரசிகளை குளிர்வித்த தங்கவிலை!

செய்திகள்

சென்னையில் நேற்று சவரனுக்கு ரூ.720 வரை உயர்ந்த தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.40 குறைந்து 5,650 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.320 குறைந்து ரூ.45,200 ஆகவும் விற்பனையாகிறது.


18 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.33 குறைந்து 4,628 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.264 வரை குறைந்து ரூ.37,024 ஆகவும் விற்பனையாகிறது.இதே போன்று வெள்ளி விலையும் ஒரு கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.80.00 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000 எனவும் விற்பனையாகிறது.

ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைக் கண்ட நிலையில் தற்போது ரூ.45 ஆயிரத்தை கடந்து உச்சத்தை தொட்டமை குறிப்பிடத்தக்கது.