இரண்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பணமழையாம்..!! கொடுத்தவைத்த இலக்கம்.!

செய்திகள்

தனிமை மற்றும் பிரிவை முடிவிற்கு கொண்டு வரும் ஒரு எண்ணாக அறியப்படுவது எண் 2. இந்த எண்ணைப் பிறப்பு எண்ணாகக் கொண்டவர்கள் தனது சொந்த விருப்பங்களுக்கு முன்னுரிமைக் கொடுப்பார்கள்.இந்த விதத்தில் மற்றவர்களில் இருந்து இவர்கள் முற்றிலும் மாறுபடுவார்கள். இப்படி எண் 2 க்குரிய தனிப்பட்ட குணாதிசயங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படித்திடுங்கள்.


எண்கணிதத்தில் நிபுணர்கள் கூற்றுப்படி, இரண்டாம் எண்ணைப் பற்றி குறிப்பிட பல்வேறு தகவல்கள் உள்ளன. ஒரு தனி நபரின் குணாதிசயங்களைக் குறிப்பிடும் சில குறிப்பிட்ட விஷயங்கள் எண் இரண்டில் உள்ளது. ஒரு கூட்டத்தில் தனித்து நிற்க வைக்கும் சில குணநலன்கள் இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு உண்டு. இவர்கள் செல்லும் இடமெல்லாம் சமாதானமும் சந்தோஷமும் நிறைந்து இருக்கும்..

எண்கணிதப்படி உங்கள் பிறப்பு எண்ணைப் பற்றி சரியாக கணக்கிடுவது எப்படி என்பதை நாம் இப்போது காணலாம். உங்கள் பிறந்த நாளை ஒற்றை இலக்க எண்ணாகக் கணக்கிடுவதன் மூலம் உங்கள் பிறப்பு எண்ணை அறிந்து கொள்ள முடியும். உங்களின் பிறந்த நாள் முதன்மை பிறப்பு பாதையாகவும், உங்கள் பிறந்த மாதம் மற்றும் வருடன் இரண்டாம் பிறப்பு பாதையாகவும் குறிப்பிடப்படுகிறது. உதாரணதிற்கு, உங்கள் பிறந்த நாள் 16, அக்டோபர் 1986 என்றால் உங்கள் பிறப்பு எண் 5 ஆகும்.

16-10-1986= 1+6+1+0+1+9+8+6=32, 3+2=5.எந்த இடத்திற்கு சென்றாலும் சமாதானத்தை பரப்புபவராக இருப்பார்கள் இரண்டாம் எண்ணைப் பிறப்பு எண்ணாகக் கொண்டவர்கள் வலிமையான குணம் கொண்டவர்கள். மனித குலத்திற்கு சமாதானத்தை வழங்கும் நபராக இருப்பார்கள். எதையும் காது கொடுத்து கேட்கும் நபராக விளங்குவதால், பல தகவல்களை சேகரிக்கும் திறன் உள்ளவராக இருப்பார்கள். சின்னச் சின்ன விஷயங்களையும் கவனத்தில் வைத்துக் கொள்வதால், வாழ்க்கையில் எந்த ஒரு சூழலையும் உங்கள் அறிவால் வெற்றி கொள்ளும் திறன் உங்களுக்கு இயல்பாகவே அமைத்திருக்கும்.


இரண்டாம் எண் உங்களுடைய பிறப்பு எண்ணாக இருந்தால், நீங்கள் மிகவும் கருணை மிக்கவர்கள். சிறந்த ராஜதந்திரம் மிக்கவர்கள். சோர்வடையாத சேவை, வழிகாட்டுதல் மற்றும் அரவணைப்பை மற்றவர்களுக்கு வழங்கும் தன்மைக் கொண்டவர்கள். எல்லா நேரத்திலும் சமாதானத்தை விரும்புகிறவர்கள். ஆனால் பல நேரங்களில் உங்களால் சந்தோஷமாக இருக்க முடியாது.

இரண்டாம் எண் நபர்கள், உணர்ச்சி மிக்கவர்கள். தனது துணைக்கு விசுவாசமாக இருப்பார்கள். நளினம் மிக்கவர்கள். சில நேரங்களில் சற்று குரலை உயர்த்தும் நிலை உங்களுக்கு ஏற்படும், ஆனால் அதனால் சில சிக்கல்களும் உண்டாகும்.தற்காலிக உறவுகளுக்கு எந்த ஒரு மதிப்பும் கொடுக்க விரும்பாதவர்கள் இரண்டாம் எண்ணைப் பிறப்பு எண்ணாகக் கொண்டவர்கள். நம்பிக்கை மற்றும் பொறுப்பு கொண்ட நீடித்து நிலைக்கும் உறவை மட்டுமே விரும்புவார்கள். உண்மையான அன்பை அதிகம் நம்பும் தன்மைக் கொண்டவர்கள் இரண்டாம் எண்ணுக்குரியவர்கள்.

இரண்டாம் எண் நபர் அதிக உணர்ச்சி மிக்கவர்கள். மென்மையான ஈகோ உள்ளவர்கள் என்பதால், விரைவில் காயப்படுவார்கள். சில நேரங்களில் கோழையாகவும் இருப்பார்கள்.


இரண்டாம் எண்ணுக்குரிய அதிர்ஷ்டக் கூறுகள்.அதிர்ஷ்ட தனிமம் – தண்ணீர்,அதிர்ஷ்ட தினம் – திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை.அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை,அதிர்ஷ்டக் கல் – முத்து,அதிர்ஷ்ட எண் – 2, 3, 7, 8, மற்றும் 29,அதிர்ஷ்ட மாதங்கள் – பிப்ரவரி, ஏப்ரல், ஆகஸ்ட், நவம்பர்,அதிர்ஷ்ட உலோகம் – வெள்ளி,அதிர்ஷ்ட எழுத்துக்கள் – B, D, K, M, O, R, T, மற்றும் Z,அதிர்ஷ்ட திசை – வடமேற்கு
-Source: boldsky