வீட்டில் பணப்பிரச்சனையா..? ..? நீங்க இந்த எளிய பரிகாரத்தை செய்தால் போதும்..!

ஆன்மீகம்

பணத்தை சம்பாதிப்பது என்பது ஒரு மிக சிறந்த கலையாகும். அதிலும் சம்பாதித்த பணத்தை செலவுகள் ஏதுமின்றி சேமிப்பது என்பது பெரும் சாதனையாகவே இருக்கிறது.எவ்வளவு தான் கஷ்டப்பட்டு கைநிறைய சம்பாதித்தாலும் பணப்பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்க இயலாது. அதிலும் நிறைய பேருக்கு என்ன செய்தாலும் பணம் கையில் தங்குவதேயில்லை. சம்பாதிக்கும் பணத்தினை சேமித்து வைத்து சிறுகச் சிறுக செலவு செய்து வந்தாலும், ஒரு கட்டத்தில் ஏதேனும் ஒரு செலவு மொத்தமாக வந்து, வீட்டில் இருக்கும் கஜானாவை காலி செய்துவிடுகிறது.


இந்தப் பிரச்சனைகள் தீருவதற்கு முன்னோர்கள் கூறிய ஒரு எளிய பரிகாரத்தை தெரிந்து கொள்ளலாம் . வீண் விரையங்கள் ஏற்பட்டு தவிப்பவர்கள் , எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் சேமிக்க முடியாமல் செலவினங்களை சந்திப்பவர்கள் தினமும் காலையில் உங்கள் வீட்டு துளசி மாடங்களில் இருக்கும் துளசிச் செடியிலிருந்து 20 துளசி இலைகளை பறித்து நீரில் போட்டு லேசாக கொதிக்க வைக்க வேண்டும் .

பிறகு அந்த துளசி இலைகளை நீங்கள் பருகுகின்ற நீரில் போட்டு , ” ஓம் தன பிராப்தி நமஹ ” எனும் மந்திரத்தை மனதிற்குள் ஒன்பது முறை துதித்தவாறே நீரை பருக வேண்டும் . இந்த பரிகாரத்தை உங்களின் முழு மனதோடு , அர்ப்பணிப்பு உணர்வோடு செய்ய வேண்டும் .


மேற்கண்ட முறையில் பரிகாரத்தை செய்பவர்களுக்கு எப்படிப்பட்ட பண கஷ்டங்களும் தீரும் . வீண் விரயங்கள் ஏற்படாமல் காக்கும் . சம்பாதிக்கின்ற பணத்தை அதிக அளவில் சேமிக்க முடியும் . இந்த பரிகாரத்திற்க்கு குறிப்பிட்ட நாட்கள் தான் செய்ய வேண்டும் என்கிற காலவரையறை ஏதும் கிடையாது . உங்களின் பணம் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும் வரை பரிகாரத்தை செய்யலாம் . உங்கள் வாழ்நாள் முழுவதும் செய்து வந்தாலும் மிகுதியான நன்மைகள் ஏற்படும் .

மேலும் கீழ்கண்ட விஷயங்களையும் கடைப்பிடிக்கலாம்:வியாழக்கிழமை விரதமிருந்து குபேரனை வழிபட பணப்பிரச்சனை படிப்படியாக தீர்ந்து பணம் வர ஆரம்பிக்கும் .வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும் வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும் .

வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும் , ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர் . எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும் .நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு நீர் அருந்த தரவும் . பின் மஞ்சள் , குங்குமம் தரவும் . இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.


அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது.தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது . பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது . பிதுர்களை மட்டும் வழிபட பணம் வரும் .வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால் , தயர் , குடிநீர் , உப்பு , ஊசி , நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது . பணம் ஓடிவிடும்.-Source: times.tamil