குரு பலத்தால் குழந்தை பாக்கியம் பெறப்போகும் ராசிக்காரர்கள்..!

ஜோதிடம்

நவகிரகங்களில் குருபகவான் சுப கிரகம். குருவின் புண்ணியத்தால் திருமணம் நடக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு பார்க்க கோடி நன்மை கிடைக்கும். குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். தனுசு ராசியில் இருந்து குரு நேரடியாக மிதுனம் ராசியை பார்க்கிறார். குரு ஐந்தாம் பார்வையாக மேஷம் ராசியையும் ஒன்பதாம் பார்வையாக சிம்மம் ராசியை பார்க்கிறார். இந்த குரு பெயர்ச்சியால் குரு பலம் பெற்று குழந்தை பாக்கியம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.


மேஷம் ராசிக்கு குரு பலம்ஒன்பதாம் வீட்டில் அமரப்போகும் குரு நிறைய பாக்யத்தையும் தேடித்தருவார். உங்க ராசியை குரு பார்ப்பதால் புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் தீரும். குரு பார்வை மூன்றாம் வீட்டில் விழுகிறது. சகோதர சகோதரிகளுக்கு நன்மைகள் நடக்கும் திருமணம் நடைபெறும். மனதிற்கு பிடித்த வாழ்க்கைத்துணை அமையும். ஐந்தாம் வீட்டை குரு பார்ப்பதால் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்கு காத்திருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். உங்க வீட்டில் குவா குவா சத்தம் கேட்கும்.

சிம்ம குரு புண்ணிய குருசிம்மத்திற்கு 5ல் குரு வந்தால் எதிர்பார்த்ததை விட பலன்கள் தேடி வரும். சிம்மராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி புண்ணியங்கள் நிறைந்த ஆண்டாக அமைகிறது. ஐந்துக்கு அதிபன் ஐந்தில் ஆட்சி பெற்று அமர்வது பூர்வ ஜென்ம புண்ணியம் தேடி வரும். குருவின் ஆதரவு அற்புதமாக இருக்கும். பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியங்கள் உங்களுக்கு நன்மை செய்யும். குழந்தை இல்லையே என்று தவித்தவர்களுக்கு குரு இந்த முறை குழந்தை பாக்கியத்தை கொடுப்பார், திருமணத்தை நடத்தி கொடுப்பார்.


தனுசு ராசிதனுசு ராசிக்காரர்களுக்கு ஜென்மகுருவாக அமரும் குரு பகவான் 5, 7, 9, ஆகிய வீடுகளை பார்க்கிறார். ஜந்தாம் பாவத்தை குரு பார்வையிடுவதால் குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளினால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆண் பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் எல்லா கனவுகளும் பூர்த்தியாகும். ஒன்பதால் வீட்டினை பார்ப்பதால் பாக்கியம் கிடைக்கும் ஆசைகள் நிறைவேறும். ஏழாம் வீட்டினை பார்ப்பதால் புது முயற்சிகள் கை கூடும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமணம் கைகூடி வரும் கணவன் மனைவி உறவு உற்சாகமடையும்.

கும்பம்லாப ஸ்தானத்தில் அமரப்போகும் குரு பகவான் கும்பம் ராசிக்கு மூன்று, ஐந்து, ஏழாம் வீடுகளை பார்வையிடுகிறார். ஓரே நேரத்தில் பஞ்சம ஸ்தானம் களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சிலருக்கு ரத்த வழி சம்பந்தபட்ட உறவில் திருமணம் நடக்கும். சொந்த தொழில் கூட்டு தொழில் லாபம் தரும். குலதெய்வ அனுகிரகம் கிடைக்கும். கனவுகள் பூர்த்தியாகும். திருமணம் ஆகியும் நீண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.-Source: boldsky