சித்திரை புத்தாண்டில் இவ் நட்சத்திரத்தில் உள்ளவர்களுக்கு ராஜ யோகத்தில் மிதக்க போகும் அதிஷ்டம்..!

செய்திகள்

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீசுபக்ருத் வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 16ம் தேதி பின்னிரவு – 17ம் தேதி முன்னிரவு இதற்குச் சரியான ஆங்கிலம் 01 ஜனவரி 2023 அன்றைய தினம் தினசுத்தி அறிவது சனிக்கிழமை பின்னிரவு – ஞாயிற்றுக்கிழமை


முன்னிரவு – சுக்லபக்ஷ தசமியும் – அஸ்வினி நக்ஷத்ரமும் – ஸிவ நாமயோகமும் – கௌலவ கரணமும் – மேஷ ராசியில் – ரிஷப நவாம்ச சந்திர அம்சத்தில் – கன்னியா லக்னத்தில் – ரிஷப நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 43.35க்கு – நள்ளிரவு 12.00க்கு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. திசா இருப்பு கேது திசை 03 வருஷம் 06 மாதம் 21 நாட்கள்.

சித்திரை:செவ்வாயை நக்ஷத்ரநாதனாகக் கொண்ட சித்திரை நக்ஷத்ரத்தில் பிறந்த அன்பர்களே, இந்த ஆண்டு காரிய தடை ஏற்படலாம். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து


உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும்.


பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு வீண் மனக்கவலை, காரிய தாமதம் நீங்கும். அரசியல்வாதிகளுக்கு மனதில் தைரியம் கூடும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு உடல்நலம் சீராகும்.பரிகாரம்: காவல்தெய்வத்தை வணங்க எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.