இலங்கையில் அதிரடியாக குறைகிறது உணவுகளின் விலை..! வெளியான விபரங்கள்.!

செய்திகள்

நாட்டில் கொத்து ரொட்டி மற்றும் பிரைட் றைஸ் ஆகியனவற்றின் விலைகள் 20 வீதத்தினால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அகில இலங்கை சிற்றுண்டிச் சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் இதனைத் தெரிவித்துள்ளார்.


சோறு பொதிகளின் விலைகளும் 20 வீதத்தினால் குறைக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.எரிவாயு விலை குறைப்பு.சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு காரணமாக இவ்வாறு விலை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, தேநீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பால் தேநீரின் விலை 90 ரூபாவாகவே காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த விலை மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.