கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது, சில சமயங்களில் கிரகங்களின் சேர்க்கை மற்றும் நிலைகளால் யோகங்கள் உருவாகும். இப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில கிரகங்கள் அரிய யோகங்களை உருவாக்கும் மற்றும் அவை பல ஆண்டுகளுக்கு பின் உருவாகும். அப்படி 500 ஆண்டுகளுக்கு பின் கோதார யோகம் உருவாகவுள்ளது. அதுவும் இந்த யோகமானது ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் உருவாகிறது.

கோதார யோகம் என்பது ஒருவரது ஜாதகத்தில் ராகு-கேதுவைத் தவிர, மற்ற 7 கிரகங்களும் ஏதேனும் 4 ராசி வீடுகளில் இருக்கும் பட்சத்தில் உருவாகும். அப்படிப்பட்ட கேதார யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நல்ல பண வரவையும், தொழில் முன்னேற்றத்தையும் காணப் போகிறார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு கேதார யோகமானது அற்புதமான பலனைத் தரும். ஏனெனில் மேஷ ராசியின் உச்ச வீட்டில் சூரியன், குரு, ராகு, புதன் ஆகிய 4 கிரகங்கள் இருக்கும். இரண்டாவது வீட்டில் சுக்கிரனும், மூன்றாவது வீட்டில் செவ்வாய் மற்றும் சந்திரனும் இருக்கும். மேலும் சனி வருமான வீட்டில் இருக்கும்.
இதனால் இக்காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் திடீர் பண வரவைப் பெறுவார்கள். பணிபரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்ட. இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். உங்கள் வாழ்க்கைத் துணையும் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு கேதார யோகம் அட்டகாசமான பலன்களைத் தரும். குறிப்பாக கூட்டு வணிகம் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் இக்காலத்தில் கிடைக்கும்.பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதே வேளையில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் வணிகத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகளும் கிடைக்கும். செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
கடகம்கடக ராசிக்காரர்களுக்கு கேதார யோகமானது அற்புதமான பலன்களை தரவுள்ளது. குறிப்பாக வேலையில் முன்னேற்றம் ஏற்படும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பணத்தை அதிகம் சேர்க்க முடியும். முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும்.
வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். உங்கள் துணையுடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும் செலவுகள் சற்று அதிகரிக்கும்.

மகரம்மகர ராசிக்காரர்களுக்கு கேதார யோகம் ஏராளமான நற்பலன்களை வழங்கவுள்ளது. வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வாகனம் அல்லது சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.பரம்பரை சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். புதிய வேலையை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.