பங்குனி உத்தர திருநாளான இன்று திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் இதை செய்யுங்கள்.!!

ஆன்மீகம்

தமிழ் மாதங்களில் பன்னிரண்டாவது மாதமான பங்குனி மாதத்தில் பன்னிரண்டாவது நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரம் இணைந்து வரும் நாளே பங்குனி உத்திரமாக கொண்டாடப்படுகிறது.இந்த பங்குனி உத்திர திருநாளில் திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த ஒரு எளிய வழிபாட்டை செய்தால் திருமணம் விரைவில் கைக்கூடுவதுடன் அவர்கள் மனதை புரிந்து கொள்ளும் நல்ல வாழ்க்கை துணை அமைந்து அவர்களின் இல்லறம் சிறப்பாக அமையும் என்று கூறப்படுகிது.


இந்த வருடம் பங்குனி உத்திரத்திற்கான நேரம்4.4.23 அன்று பங்குனி உத்திரமாக இருந்தாலும் அதே நாளில் பௌர்ணமியும் இணைந்து வர வேண்டும். பௌர்ணமி ஆனது ஐந்தாம் திகதி தான் வருகிறது எனவே அந்த நாளில் பங்குனி உத்திரத்திற்கான வழிபாட்டை செய்வது சிறந்தது.

அதிலும் திருமணத்திற்கான இந்த வழிபாட்டை செய்வதற்கு புதன்கிழமை காலை 10:10 மணியிலிருந்து 11:30 மணி வரை உத்திரம் நட்சத்திரம் பௌர்ணமி இணைந்து இருக்கும் இந்த காலத்தில் செய்வது மிகவும் சிறந்தது.இந்த பங்குனி உத்திர நாளில் காலையில் எழுந்து குளித்து பூஜையறையை சுத்தம் செய்து படங்களுக்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து முருகருக்கு செவ்வரளி பூவை சூட்டி அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.


வீட்டில் சிவன் பார்வதி பெருமாள் மகாலட்சுமி தாயார் இவர்களின் படங்கள் இருந்தாலும் அவர்களுக்கும் மலர் மாலைகளை அணிவித்து வழிபடலாம்.அடுத்ததாக நெய்வேத்தியமாக ஏதேனும் ஒரு இனிப்பை செய்து வைத்துக் கொள்ளுங்கள். முடியாதவர்கள் வெற்றிலை, பாக்கு பழத்துடன் ஒரு டம்பளர் பாலில் தேன் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து வைத்து விடுங்கள்.

திருமணத்திற்காக பூஜை செய்பவர்கள் இந்த நேரத்தில் திருமணசேரி பதிகம் படிக்க வேண்டும்.இந்த வழிபாட்டோடு சேர்த்து திருமணத்திற்காக காத்து இருப்பவர்கள் சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கை துண்டுடன் வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், பூ இவற்றுடன் ஒரு ரூபாய் நாணயம் இதற்கு மேல் எவ்வளவு வேண்டுமானாலும் வைக்கலாம்.

இதை ஒரு சுமங்கலியிலிருந்து வசதிக்கு ஏற்ப எத்தனை சுமங்கலி பெண்களுக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.இதை திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் கையால் கொடுத்தால் நல்லது.அவர்களால் முடியாத பட்சத்தில் அவர்களின் பெற்றோர்களும் இதை செய்யலாம்.


பெற்றோர்கள் இதை செய்யும் பொழுது திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களின் கைகளில் கொடுத்து வாங்கி அதை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு இதை சுமங்கலி பெண்களுக்கு கொடுக்கலாம்.இதை நாம் பங்குனி உத்திரம் நிறைந்து இருக்கும் நேரமான 10:10 லிருந்து 11: 10 இந்த நேரத்தில் வீட்டில் வைத்து வணங்கி வீட்டின் அருகில் இருக்கும் சுமங்கலி பெண்களுக்கு கொடுக்கலாம்.

அல்லது ஆலயத்திற்கு சென்று அம்பாளின் பாதங்களில் வைத்து வணங்கி அங்கேயும் கொடுக்கலாம்.பங்குனி உத்திர திருநாளானது திருமணத்திற்கே உகந்த நாள். சிவனார் பார்வதியை மணந்த நாளாகவும், ராமர் சீதையை மணந்த நாளாகவும், பெருமாள் மகாலட்சுமி தாயாரையும், முருகப்பெருமான் தெய்வானையும் மணந்த நாளாக அத்தனை தெய்வங்களுக்கு திருமணம் நடந்து இன்றைய நாளில் திருமணத்திற்காக வேண்டி இந்த வழிபாட்டுடன் சுமங்கலி பெண்களுக்கு இந்த பொருளை கொடுக்கும் போது நல்ல வாழ்க்கை அமையும்.