இனி இலங்கையில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி..!! வெளியான திடுக்கிடும் செய்தி.!

செய்திகள்

அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் செய்யும் பாரியளவிலான மோசடி மற்றும் ஊழல்களை, கீழ்நிலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எவ்வித அச்சமும் இன்றி வெளிப்படுத்தும் வகையில், சிறப்பு அமைப்பை விரைவில் தயாரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.இதுபோன்ற தகவல்களை வழங்கும் அரசு அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் சர்வதேச நாணய நிதியம் அரசுக்கு அறிவித்துள்ளது.


அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் செய்யும் மோசடிகள், கீழ்நிலை அரச அதிகாரிகளுக்கு தெரிந்தாலும், அந்த தகவலை யாருக்கும் தெரிவிப்பதில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அவ்வாறு தகவல் கொடுத்தால், சம்பந்தப்பட்டவர் வேலை இழக்க நேரிடும் என்ற அச்சம் நிலவுகிறது.

ஆனால், புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் மூலம், அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் செய்யும் மோசடி மற்றும் ஊழல்களை, கீழ்நிலை அரசு ஊழியர்கள் அச்சமின்றி, இரகசியமாக வெளிப்படுத்தும் வகையில், ஒரு அமைப்பு தயாரிக்கப்படுகிறதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.