குழந்தைக்கு 5 மாதத்திலிருந்து தாய்ப்பாலோடு சேர்த்து கொடுக்க வேண்டிய உணவுகள்.!! அவசியம் படியுங்கள்.!

ஆரோக்கியம் செய்திகள்

ஐந்து மாதம் நிரம்பிய குழந்தைக்கு ஏற்ற உணவு தாய்ப்பால் தான். அது தான் சிறந்ததும்!! பிறந்து 6 மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் தான் கொடுக்க வேண்டும்.பிறந்த குழந்தைக்கு முழுமையான ஊட்ட உணவு தாய்ப்பால். குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.


தாய்-குழந்தை இடையே நல்ல பாசப்பிணைப்பை ஏற்படுகிறது. மூளை வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் உள்ளன. புத்திக் கூர்மையை உயர்த்தும். தாய்ப்பால் ஆன்டிபாடிகளை குழந்தைக்கு வழங்குகிறது. பல நோய்த் தொற்றுகளிலிருந்தும் குழந்தையைப் பாதுகாக்க உதவுகிறது.

குழந்தைக்கு ஒவ்வொரு 3 மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதையும் படியுங்கள்: ஆரோக்கியமான முறையில் ஒல்லியான குழந்தையை குண்டாக்கும் உணவுகள்.பிறந்த குழந்தைக்கு மார்பகத்தின் இரு பக்கங்களில் இருந்தும் குறைந்தது 10 நிமிடத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.


இவ்வாறு அடிக்கடி உணவளிப்பதால் தாய்ப்பால் ஆரோக்கியமானதாகவும், அதிகப்படியான கொழுப்புச் சக்தி இல்லாததாலும் விளங்குகிறது. முறையான பாதுகாப்பு முறைகள் பின்பற்றிய பிறகு சுகாதாரமான முறையில் பாலூட்ட வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் பல நன்மைகள் ஏற்படுகின்றன.

அதாவது தாய்ப்பால் கொடுக்கும் போது தாய் உடனடி கர்ப்பம் தரிப்பது தவிர்க்க உதவுகிறது. மார்பகப் புற்றுநோய் வருவது குறைவு. தாயின் தேவையற்ற உடல் எடை குறையும். ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் தருவது மிகவும் அவசியம். அதற்குப் பிறகும் கூட பாதுகாப்பான, ஆரோக்கியமான திட உணவுகளுடன் சேர்த்து தாய்ப்பால் கொடுப்பதையும் தொடரலாம்.

இதையும் படியுங்கள்: இன்று உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் 5 மாதத்திலிருந்து தாய்ப்பாலோடு பசும் பால், ஏதேனும் பழச்சாறு, கேரட் போன்ற காய்கறிகளை வேக வைத்து எடுத்த சாறு , பருப்பு வேகவைத்து எடுத்த சாறு போன்றவை கொடுக்கலாம். 6 மாதத்திற்கு பிறகு


இட்லி, வேகவைத்து மசித்தகாய்கறிகள்,பழக்கூழ், வாழைப்பழம், வேகவைத்த ஆப்பிள், நன்றாக பிசைந்த பருப்பு சாதம் ஆகியவை தரலாம். இதனுடன் சிறிது பட்டர் அல்லது நெய் சேர்த்து பிசைந்து கொடுத்தால் சுவையாகவும், குழந்தைக்கு தேவையான கொழுப்புசத்தும் கிடைக்கும். ஆரம்பத்தில் காய்கறிகளாக கேரட், உருளைக்கிழங்கு, கீரையை பயன்படுத்தலாம்.source:malaimalar