ஏப்ரல் மாதம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு தொழிலில் அமோக வெற்றி கிடைக்கப் போகுதாம்.!!

செய்திகள்

2023 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாத கிரக நிலைகளைப் பொறுத்தவரை, இந்த ஏப்ரல் மாதமானது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக, இருக்கப் போகிறது. குறிப்பாக சில ராசிக்காரர்கள் ஏப்ரல் மாதத்தில் தொழிலில் நல்ல பலனைப் பெறவுள்ளார்கள்.


பொதுவாக அனைவருக்குமே ஒரு மாதத்தில் நுழையும் போது, அந்த மாதத்தில் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும், நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்போம். இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் கிரகங்களின் நிலைகளால் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் மாற்றம் ஏற்படும்.குறிப்பாக சில ராசிக்காரர்கள் தங்களின் தொழில் வாழ்க்கையில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது எந்த ராசிக்காரர்கள் 2023 ஏப்ரல் மாதத்தில் தொழிலில் நற்பலனைப் பெறவுள்ளார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதமானது மிகவும் அற்புதமாக இருக்கும். ராகு, கேது நிலைகளால் இதுவரை சந்திக்க தடைகள் அனைத்தும் நீங்கும். செவ்வாயால் நற்பலன்கள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது பாதியில் தொழில் மற்றும் நிதி நிலை சிறப்பாக இருக்கும். சனி மற்றும் சந்திரனின் நிலைகளால் செல்வம் பெருகும்.

ரிஷபம்ரிஷப ராசிக்காரர்கள் ஏப்ரல் மாதத்தில் நிறைய நற்செய்திகளைப் பெறுவார்கள். குடும்பத்தினரின் முழு ஆதரவு இந்த மாதத்தில் கிடைக்கும். நிதி ரீதியாக இம்மாதம் மிகவும் அற்புதமாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆனால் இந்த மாதத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பிவிடாதீர்கள்.


மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதமானது அட்டகாசமாக விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் மாதமாக இருக்கும். குறிப்பாக சூரிய பெயர்ச்சிக்கு பின், 11 ஆவது வீட்டில் சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் ஒன்றாக இருப்பதால், அற்புதமான பலன்கள் கிடைக்கும். சனியின் நிலையால் நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ராகுவின் நிலையால் எதிர்பாராத வெற்றி கிடைக்கும்.

கடகம்கடக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் தொழில் வாழ்க்கை அமோகமாக இருக்கும். நல்ல பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் தங்களின் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். புதனின நிலையால் வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். ஆனால் செலவுகள் சற்று அதிகமாக இருக்கும்.


தனுசுதனுசு ராசிக்காரர்களுக்கும் ஏப்ரல் மாதம் நல்ல முன்னேற்றத்தைத் தரும் மாதமாக இருக்கும். நிதி நிலையில் மட்டுமின்றி, தொழிலிலும் நல்ல ஏற்றத்தைக் காண்பார்கள். இம்மாதத்தில் வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணிபரிபவர்களுக்கு அலுவலத்தில் முன்னேற்றம் ஏற்படும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். நல்ல பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் உருவாகும். சனியின் நிலையால் இனிமேல் பொற்காலமாக இருக்கும்.

கும்பம்கும்ப ராசிக்காரர்களுக்கு இதுவரை மோசமாக இருந்திருக்கலாம். ஆனால் ஏப்ரல் மாதம் மிகவும் சிறப்பான மாதமாக இருக்கும். ஏப்ரல் மாத கிரகங்களின் நிலைகளால் தடைபட்ட காரியங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். எப்பேற்பட்ட கடினமான வேலைகளையும் இம்மாதத்தில் அசால்ட்டாக செய்து முடிப்பீர்கள். வணிகம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க இது சிறந்த மாதமாக இருக்கும்.