நாளை முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை பெருந்தொகையால் அதிரடியாக குறைப்பு.!!

செய்திகள்

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் ஆயிரம் ரூபாவினால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் வரலாற்றில் இவ்வளவு பாரிய தொகையில் விலை குறைக்கப்பட்டமை இதுவே முதல் சந்தர்ப்பம் என தெரிவித்துள்ளார்.


ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் உலக சந்தையில் எரிவாயு விலை குறைவடைந்தமை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் இவ்வாறு விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை 3743 ரூபாவாகும்.