உங்க ராசிப்படி இவர்களை காதலித்தால் உங்கள் வாழ்கை அதோகதி தானாம்.!

ஜோதிடம்

தற்போதைய காலக்கட்டத்தில் காதலிப்பது என்பது மிகவும் கடினமானதாக மாறிவிட்டது. குறிப்பாக ஒருவருக்கொருவர் இணக்கமாக இல்லாதபோது அந்த காதலைத் தொடர்வது மிகவும் கடினமானது. இந்த சிக்கலைத் தீர்க்க உங்களின் பிறந்த ராசி உங்களுக்கு உதவலாம். ஏனெனில் ஒருவரின் ராசி அவர்களின் ஆளுமையை தீர்மானிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.


பன்னிரண்டு இராசி அறிகுறிகள் மக்கள் தங்களுக்கு பொருத்தமான காதல் தொடர்பைக் கண்டுபிடிப்பதை எளிதாக்குகின்றன. இந்த தெளிவு இருந்தால் பொருந்தாத கூட்டாளர்களுக்காக நேரத்தை வீணடிப்பதை நீங்கள் எளிதில் தவிர்க்கலாம். இதன்படி உங்கள் ராசிக்கும், ஆளுமைக்கும் முற்றிலும் பொருந்தாத ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்உங்கள் ராசிப்படி கடக ராசிக்காரர்களை நீங்கள் காதலிப்பதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் தைரியமானவர் மற்றும் இயற்கையாகவே மனக்கிளர்ச்சி உள்ளவர், அதேசமயம் கடக ராசிக்காரர்கள் இறுக்கமானவர்கள் மற்றும் ஒதுங்கி இருப்பவர்கள். நீங்கள் ஒரு பரபரப்பான அனுபவத்திற்காக காத்திருக்கும்போது, கடக ராசிக்காரர்கள் பாதுகாப்பான உறவில் இருக்க விரும்புகிறார்கள்.


ரிஷபம்நீங்கள் சிம்ம ராசிகாரர்களை காதலிப்பதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் விஷயங்களை மெதுவாகவும், சீராகவும் செய்ய விரும்பும் ஒருவர், அதேசமயம் சிம்ம ராசிக்காரர்கள் இயற்கையாகவே பரபரப்பானவர்கள் எனவே அவர்களை கையாளுவது உங்களுக்கு கடினம். உங்கள் உறவு உண்மையில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய நீங்கள் இருவரும் நிறைய சமரசம் செய்ய வேண்டியிருக்கும்.

மிதுனம்உங்களுக்கு முற்றிலும் பொருத்தமில்லாத ராசி என்றால் அது மீனம்தான். உங்களைப் பொறுத்தவரை, கம்யூனிகேஷன் ஒரு முக்கிய அம்சமாகும், அதே சமயம் மீன ராசிக்காரர்கள் எல்லாவற்றையும் பற்றி கொஞ்சம் கனவு காண்பவர்கள்,

இதனை நீங்கள் கையாளுவது அதிக மனஉளைச்சலை ஏற்படுத்தும். நீங்கள் லாஜிக்காக சிந்திப்பீர்கள் அதேசமயம் மீன ராசிக்காரர்கள் உள்ளுணர்வு சொல்வதைக் கேட்பவர்கள். இதனால் பிரச்சினைகள் வளர்ந்து கொண்டே இருக்கும்.


கடகம்கடக ராசியும், மேஷ ராசியும் ஒரு நல்ல உறவில் இருக்க முடியாது. நீங்கள் உணர்வுகளுடன் தொடர்பில் இருப்பதை நீங்கள் விரும்புகிறீர்கள், அதே நேரத்தில் மேஷம் ஒரு தைரியமான மற்றும் சமூக ஆளுமை கொண்டது. நீங்கள் உணர்திறன் மற்றும் மென்மையானவர்கள், அதேசமயம் அவர்கள் உற்சாகமானவர்கள். நீங்கள் ஒரு மேஷத்துடன் இருக்க விரும்பினால் நீங்கள் நிறைய சமரசம் செய்ய வேண்டும்.

சிம்மம்இவர்களுக்கு முற்றிலும் பொருந்தாதவர்கள் ரிஷப ராசிக்காரர்கள். உங்களின் சொந்த நிபந்தனைகளோடு நீங்கள் வேகமான வாழ்க்கையை வாழ விரும்புகிறீர்கள் ஆனால் ரிஷப ராசிக்காரர்கள் அனைத்திலும் பொறுமையை கடைபிடிப்பவர்கள். இந்த ஆளுமை கொண்டவர்கள் ஒரே இடத்தில் வேலை பார்ப்பதே கடினம்.

கன்னிநீங்கள் தனுசு ராசிக்காரர்களை காதலிப்பதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் ஒரு சிந்தனையாளராக இருக்கிறீர்கள், அவர்களை சரியாக ஆராய்ந்த பிறகு காரியங்களைச் செய்வீர்கள், அதேசமயம் தனுசு ராசிக்காரர்கள் மகிழ்ச்சியான-அதிர்ஷ்டசாலிகள், அவர்கள் விரைவாக முடிவுகளை எடுப்பார்கள். அவர்களுடைய இந்த உற்சாகமான தன்மை உங்களுடன் எளிதில் பழக விடாது. அவர்களின் மனக்கிளர்ச்சி முடிவுகளை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியிருந்தால் உங்களுக்கு எப்போதும் மனஅழுத்தம் இருக்கும்.


துலாம்துலாம் ராசிக்காரர்கள் மகர ராசிக்காரர்களை தவிர்க்க வேண்டும். நீங்கள் சமூக மற்றும் வாழ்க்கையில் சமநிலையை எதிர்பார்க்கும் ஒருவர், எனவே மகரராசிக்காரரை காதலிப்பது தவறான தேர்வாக இருக்கும். மகர ராசிக்காரர்களுக்கு அவர்களின் எதிர்காலம்தான் மிகவும் முக்கியம், இதனால் சில சமயங்களில் கடுமையானவர்களாக நடந்து கொள்வார்கள். எனவே, நீங்கள் ஒரு மகரத்துடன் ஜெல் செய்ய முடியாவிட்டால், உங்கள் உறவு நொறுங்கிவிடும்.

விருச்சிகம்கும்ப ராசிக்காரர்களிடம் இருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டும். தேளைப் போலவே, நீங்கள் ஒரு உறவில் தனியுரிமை மற்றும் விசுவாசத்தைத் தேடுகிறீர்கள், அதேசமயம் ஒரு கும்பம் தீவிர சமூக இயல்புடையது. நீங்கள் இயற்கையாகவே ஆழ்ந்த உணர்திறன் உடையவர், அதேசமயம் ஒரு கும்பம் உணர்ச்சிவசப்பட்டு பிரிந்து செல்லக்கூடிய நபராக இருப்பார்கள். எனவே அவர்களுடன் உறவில் இருப்பது மிகவும் கடினம்.

தனுசுதனுசு ராசிக்காரர்கள் கன்னி ராசிக்காரர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். தனுசு ராசிக்காரர்கள் அனைத்திலும் சாகசத்தை விரும்புபவர்கள், அதேசமயம் கன்னி ராசிக்காரர்கள் அனைத்தையும் திட்டமிட்டு செய்பவர்கள். எனவே கன்னி ராசிக்காரரர்களின் இயல்பு உங்களின் வேடிக்கைக்கு தடையாக இருக்கலாம்.

மகரம்நீங்கள் துலாம் ராசிக்காரர்களை விட்டு விலகி இருக்க வேண்டும். நீங்கள் எப்போதும் இலக்கை நோக்கி செல்பவர். எனவே உங்களுக்கு துலாம் உடனான உறவை உருவாக்குவது கடினம். சமூக நோக்குடைய துலாம் உடன் இணங்காத ஒரு மறைமுக வாழ்க்கை முறை உங்களிடம் அதிகம் உள்ளது. நீங்கள் ஒரு துலாம் உடனான உறவை உருவாக்க எதிர்பார்த்தால், நீங்கள் இருவரும் உங்கள் எல்லைகளை அமைக்க வேண்டியிருக்கும்.

கும்பம்நீங்கள் விருச்சிக ராசிக்காரர்களைக் காதலிக்கக் கூடாது. நீங்கள் சமூகத்துடன் இணைந்து இருக்க வேண்டுமென்று விரும்புபவர்கள், அதேசமயம் விருச்சிக ராசிக்காரர்கள் சமூகத்தில் இருந்து விலகி இருக்க விரும்புபவர்கள். நீங்கள் விஷயங்களைப் பற்றி கொஞ்சம் வெளிப்படையாக இருக்கிறீர்கள், அதே சமயம் ஒரு விருச்சிக ராசிக்காரர்கள் சில சமயங்களில் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், இது உறவைத் தக்கவைத்துக்கொள்வதை உங்களுக்கு கடினமாக மாற்றும்.

மீனம்மீன ராசிக்காரர்கள் மிதுன ராசிக்காரர்களை காதலிக்கக்கூடாது. நீங்கள் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருக்கும்போது அவர்கள் லாஜிக்காக சிந்திப்பவர்களாக இருப்பார்கள். இது அவர்களுடன் உறவை வளர்ப்பதை கடினமாக்குகிறது. நீங்கள் உணர்ச்சிரீதியாக ஒன்றை பார்க்கும்போது அதையே அவர்கள் லாஜிக்காக பார்ப்பார்கள். இதனால் உங்களுக்குள் கருத்து மோதல்கள் வந்துகொண்டே இருக்கும்.