இந்த 5 ராசிக்கார ஆண்களை கல்யாணம் பண்றவங்க.. வாழ்நாள் முழுவதும் சந்தோஷமா இருப்பாங்களாம்.!!

செய்திகள்

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் ஒரு முக்கியமான நிகழ்வு. குறிப்பாக பெண்களுக்கு திருமணத்திற்கு பின்னர் அவர்களது வாழ்க்கையே முற்றிலும் மாறிவிடும். அது பிறந்து வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு செல்வதால் மட்டுமல்ல,


தனக்கு வாழ்க்கைத் துணையாக வரும் கணவராலும் தான். அதனால் தான் பெண்கள் அனைவருக்குமே தனக்கு வரப்போகும் கணவனைப் பற்றி பல கனவுகள் மற்றும் ஆசைகள் இருக்கும். குறிப்பாக வருங்கால கணவர் தன்னை சந்தோஷமாக வைத்துக் கொள்வாரா என்ற சந்தேகம் பெண்களின் மனதில் இருக்கும்.

இருப்பினும், அனைத்து விஷயங்களையும் மனதில் கொண்டு, பெண் வீட்டாரும் பொருத்தமான வரனைத் தேர்வு செய்கிறார்கள். ஆனால் ஜோதிடப்படி, ஒருசில ராசியைச் சேர்ந்த ஆண்கள் எதிலும் மிகச்சரியானவர்களாக மற்றும் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக தனது வாழ்க்கைத் துணையை வைத்துக் கொள்வார்கள். உங்களுக்கு அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து படியுங்கள்.


துலாம்துலாம் ராசியைச் சேர்ந்த ஆண்கள் மிகவும் ரொமான்டிக்கானவர்கள். அவர்களுக்கு பெண்களைப் புரிந்து கொள்ளும் முழு உணர்வும் இருக்கிறது. முக்கியமாக இவர்கள் தங்கள் மனைவிக்கு அவ்வப்போது பரிசுகளைக் கொண்டு ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

தனுசுதனுசு ராசியைச் சேர்ந்த ஆண்கள் மிகவும் புத்திசாலிகள். இவர்கள் மிகச்சிறந்த கணவராக இருப்பார்கள். இந்த ராசிக்கார ஆண்கள் தங்கள் மனைவியை மிகவும் அக்கறையாக கவனித்துக் கொள்வார்கள். முக்கியமாக இந்த ஆண்கள் மிகவும் ரொமான்டிக்கானவர்கள் மற்றும் நடைமுறைக்கு ஏற்ப புரிந்து நடந்து கொள்ளக்கூடியவர்கள்.


ரிஷபம்ரிஷப ராசியைச் சேர்ந்த ஆண்கள் இயற்கையாகவே மிகவும் அமைதியானவர்கள். இவர்களுக்கு பெண்கள் நீண்ட நேரம் சமையலறையிலேயே இருப்பதால், சமையலறை பிடிக்காது. இதனாலேயே இவர்கள் தங்கள் மனைவிக்கு அதிக கஷ்டப்படக்கூடாது என அடிக்கடி ஹோட்டல்களில் வாங்கி சாப்பிடுவார்கள். அவ்வாறு தனது மனைவியை இவர்கள் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். முக்கியமாக இந்த ஆண்களைக் கட்டுப்படுத்துவது எளிது.

கும்பம்கும்ப ராசிக்கார ஆண்கள் மிகவும் ரொமான்டிக்கானவர்கள். ஆனால் அவர்கள் தங்கள் மனைவியை விட தங்கள் உலகத்தை பற்றி அதிக அக்கறைக் காட்டுவார்கள். இத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்கார ஆண்களை மணந்து கொள்ளும் பெண்கள் பொறுமையாக இருக்கும் போது மட்டுமே, இவர்கள் சிறந்த கணவர்களாக நிரூபிக்கப்படுகிறார்கள்.


மகரம்மகர ராசியைச் சேர்ந்த ஆண்கள் மிகவும் புத்திசாலிகள். இது மட்டுமின்றி, இவர்கள் நீண்ட காலம் தங்கள் வாழ்க்கையை மிகவும் பிரகாசமாக வைத்துக் கொள்வார்கள். ஆனால் அவ்வளவு எளிதில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் கட்டுப்பட்டு இருப்பதை விரும்புவதில்லை.