சித்திரை மாதங்களில் மிக அவதானமாக இருக்கவேண்டிய ராசிக் காரர்கள் இவர்கள் தானாம்.!!

செய்திகள்

2023 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் நுழைந்துவிட்டோம். பலருக்கும் ஏப்ரல் மாதம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஒருவித ஆவல் இருக்கும். ஜோதிடத்தின் உதவியுடன் ஒரு மாதம் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் 2023 ஏப்ரல் மாதத்தில் பல கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. அதில் முதலாவதாக ஏப்ரல் 06 ஆம் தேதி சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்கிறார்.


அதன் பின் சூரியன் ஏப்ரல் 14 ஆம் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். பின் ஏப்ரல் 22 ஆம் தேதி குரு மேஷ ராசிக்கு செல்கிறார். இது தவிர கிரக சேர்க்கைகளால் ஒருசில யோகங்களும் உருவாகவுள்ளன. இதனால் ஏப்ரல் மாதத்தில் சில ராசிக்காரர்கள் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இப்போது 2023 ஏப்ரல் மாத கிரக நிலைகளால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

சிம்ம ராசிக்காரர்கள் ஏப்ரல் மாதத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இந்த மாதத்தில் நிதி நிலை சற்று பலவீனமாக இருக்கும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தாவிட்டால், பண பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். வியாபாரிகள் சில சிக்கல்களை சந்திக்கக்கூடும். இந்த மாதத்தில் எவ்வித முதலீடுகளையும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் பண இழப்புக்களை சந்திக்க நேரிடும்.


ஏப்ரல் மாதத்தில் துலாம் ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்கலாம். குறிப்பாக ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சண்டைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் தேவையற்ற சண்டைகளை சந்திக்க நேரிடும். இந்த சண்டைகளை தவிர்க்க முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், அது உறவில் முறிவை ஏற்படுத்திவிடும்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் சற்று கலவையான பலன்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் பணியிடத்தில் சண்டைகள் உங்களைத் தேடி வந்தால், அவற்றைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். இந்த மாதத்தில் பண பரிவர்த்தனைகளைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், இழப்புக்களை சந்திக்க நேரிடும். திருமணமானவர்கள் தங்கள் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.


தனுசு ராசிக்காரர்கள் ஏப்ரல் மாதத்தில் கவனமாக மற்றும் பொறுமையாக இருக்க வேண்டும். ஒரு வேலையை முடிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். வருமானத்தில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.