ஏப்ரல் மாதத்திற்கான அரச ஊழியர் சம்பளம் எதிர்வரும் 10ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வழங்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.இம்மாதத்திற்கான அரச ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் எதிர்வரும் 10ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வழங்கப்படும் என அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 135 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என தெரிவித்தார்.இதேவேளை, பொருட்கள் மற்றும் சேவை வழங்குனர்களிடம் இருந்து கோரப்பட்டுள்ள எரிபொருள் விலை குறைப்பானது பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டுமென நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
