இலங்கையில் மூன்று அத்தியாவசியப் பொருட்களின் விலை மிகவும் சடுதியாக குறைப்பு..!

செய்திகள்

மூன்று அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


220 ரூபாவாக இருந்த ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 200 ரூபாவாகவும், 340 ரூபாவாக இருந்த பருப்பு கிலோ ஒன்றின் விலை 310 ரூபாவாகவும்,230 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கோதுமை மாவின் விலை தற்போது 210 ரூபாவாக காணப்படுவதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.