இந்த மாதத்தில் எதிர்பாராத விதமாக இந்த ராசிகர்களுக்கு பணம் தேடி வருமாம்..!! வாங்க பார்க்கலாம்.!

செய்திகள்

நமது எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் கிரக நிலைகள் முக்கியப்பங்கு வகிக்கிறது. அதன்படி ஏப்ரல் மாதம் ஒவ்வொரு ராசிக்கும் கிரகங்கள் ஒவ்வொரு விதமான பலன்களை அளிக்கப்போகிறது.இந்த மாதம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப்போகிறது, சில ராசிக்காரர்களுக்கு சோதனைகள் நிறைந்த காலமாக இருக்கப்போகிறது. அந்தகையில் எந்தெந்த ராசிகள் என்னென்ன பலன்களை பெறபோகின்றார்கள் என பார்க்கலாம்.யாருக்கு அதிஸ்டம்; யாருக்கு கஸ்டம்


மேஷம்:இந்த மாதம் மேஷ ராசிக்கார்களுக்கு தொழில்ரீதியாக சிறப்பான மாதமாக இருக்கும். உங்களுக்கு பணிச்சுமை குறைவாகவும், பணிச்சூழல் முற்றிலும் சாதகமாகவும் இருக்கும். இது நீங்கள் சிறப்பாக செயல்படவும், உங்கள் சக ஊழியர்களுக்கு முன்மாதிரியானவராகவும் மாறவேண்டிய நேரம். மேலும், நீங்கள் வியாபாரத்தில் இருந்தால், உங்கள் வியாபாரம் பெரிதாக வளரும்.

ரிஷபம்:ரிஷப ராசிக்காரர்கள் இந்த மாதம் தங்கள் மதிப்பை அனைவருக்கும் உணரத்தப்போகும் நேரமாக இருக்கும். நீங்கள் வேலையில் இருந்தால் இந்த மாதம் பதவி உயர்வுகள் மற்றும் புதிய பொறுப்புகள் கிடைக்கும். புதிய சவால்களைக் கண்டு அஞ்ச வேண்டாம், அது உங்கள் திறமைக்கு ஏற்றதாக இருக்கும். வியாபாரத்தில் இருப்பவர்கள் இந்த மாதம் சில சிறப்பான வாய்ப்புகளைப் பெறலாம்.


மிதுனம்:இந்த மாதம் உங்கள் தகுதியை நிரூபிக்க நீங்கள் கடினமான சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் வழியில் பல கவனச்சிதறல்களும், தடைகளும் வரலாம். உங்கள் இலக்கில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வியாபாரத்தில் இருப்பவர்கள் சில கடுமையான போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும். பார்ட்னர்களுக்கு இடையே சில வாக்குவாதங்கள் எழலாம்.

கடகம்:இந்த மாதம் எதையும் நிதானமாக செய்ய நேரம் இருக்கும். பணிச்சுமையும் இந்த மாதம் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கும். நிறைய பாராட்டுகளும், ஊக்கமும் உங்களைத் தேடிவரும். உங்கள் திட்டத்தின்படியே அனைத்தும் நடக்கும். இந்த நேரம் உங்கள் ஆற்றல்களை முன்னெடுத்துச் செல்வதற்கானது, எனவே அதனை சரியாக பயன்படுத்துங்கள்.

சிம்மம்:சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பாசிட்டிவான மாதமாக இருக்கும். உங்களுக்கு வாய்ப்புகளும், சவால்களும் சமமான அளவில் இருக்கும். இருப்பினும், உங்கள் குழுவின் உதவியால் உங்கள் சவால்களை சமாளிப்பதுடன், வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்த முடியும். வியாபாரத்தில் இருப்பவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடன் இருப்பவர்களை உற்சாகமாக வைத்திருங்கள்.


கன்னி:இந்த மாதம் உங்கள் அலுவலகத்தில் நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களின் வேலையை கடுமையாக பாதிக்கும் பல கவனச்சிதறல்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் இலக்கை நோக்கி நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மாதம் உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக வேலை செய்பவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வீர்கள். மேலும், கடுமையான பணிச்சுமையும் இருக்கலாம். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும்.

துலாம்:துலாம் ராசிக்காரர்கள் இந்த மாதம் புதிதாக எந்த வேலையிலும், திட்டத்திலும் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. புதிய பதவி அல்லது பொறுப்புகள் வழங்கப்பட்டால் அதற்கு நீங்கள் தகுதியானவர்கள் என்பதை நிரூபிக்க கடுமையாக போராட வேண்டியிருக்கும். உங்களால் செய்ய முடியாத வேலைகளை ஏற்றுக்கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பெரிய மாற்றங்கள் இருக்காது.

விருச்சிகம்:விருச்சிக ராசிக்காரர்கள் இந்த மாதம் அலுவலகத்தில் மிகவும் பொறுமையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும். சக ஊழியர்களுடன் பொறுமையாக இருக்க வேண்டும், ஏனெனில் உங்கள் கோபத்தைத் தூண்டும் சூழ்நிலைகள் இருக்கலாம். அலுவலகத்தில் உங்கள் இமேஜ் தவறானதாக மாற வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் இருப்பவர்கள் சிறிய நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.

தனுசு:கடந்த சில மாதங்களாக இருந்த மனஅழுத்தம் நிறைந்த பணிச்சூழல் இந்த மாதம் சிறப்பானதாக மாறும். உங்கள் பணிக்காக நீங்கள் மேலதிகாரிகளாலும், சக ஊழியர்களாலும் பாராட்டப்படுவீர்கள். இதன் விளைவாக உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். நீங்கள் வியாபாரத்தில் இருந்தால் சில புதிய வாய்ப்புகளைப் பெறலாம், அதனை உங்களால் செய்ய முடியுமா என்பதை நன்றாக சிந்தித்து அதன்பின் தொடங்குங்கள்.

மகரம்:இந்த மாதம் பணிச்சுமை அதிகமாக இருப்பதால் நீங்கள் பல குழப்பங்களை சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் வேலையில் பல கவனச்சிதறல்கள் ஏற்படலாம், உங்கள் இலக்கை மட்டும் ஒருபோதும் தவற விடாதீர்கள். உங்கள் மேலதிகாரிகள் உங்கள் மீது தவறான அபிப்ராயத்தை உருவாக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும், இல்லையெனில் உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படலாம்.

கும்பம்:கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் திருப்திகரமான மாதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும், ஆனால் பணிச்சுமை குறைவாகவே இருக்கும். இது உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கலாம். வணிகர்களுக்கு, தொழிலில் தங்கள் பெயரைக் கட்டியெழுப்ப நீங்கள் பல புதிய போட்டிகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.

மீனம்:இந்த மாதம் மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் கடினமான மாதமாக இருக்கப்போகிறது. முதலில், உங்கள் மேலதிகாரியின் கோபத்தை நீங்கள் சமாளிக்க வேண்டும். மேலும், உங்கள் பணிச்சூழல் எதிர்மறையாக இருக்கலாம். மாத இறுதியில் இந்த சூழல் மாறலாம். வியாபாரத்தில் உங்கள் பார்ட்னரின் முரண்பாடான அணுகுமுறையை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும்.