கனடாவில் வீடு வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி..! வெளியாகிய புதிய அறிவித்தல்

செய்திகள்

கனடாவில் பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட அல்லது பணி அனுமதிப்பத்திரம் உடைய வெளிநாட்டவர்கள் சொத்துக்களை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கனேடியர் அல்லாதவர்களும் சொத்துக்களை கொள்வனவு செய்ய முடியும்


சொத்து ஒன்றை கொள்வனவு செய்ய வேண்டுமாயின் அவ்வாறானவர்களின் பணி அனுமதிப்பத்திரம் காலாவதியாக குறைந்தபட்சம் 183 நாட்கள் மீதமிருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கனேடியர் அல்லாதவர்கள், வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களினாலும் சொத்துக்களை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த சொத்தினை அபிவிருத்தி செய்வதாக இருந்தால் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் வெளிநாட்டவர்கள் கனடாவில் சொத்து கொள்வனவு செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.