யாழில் மறைக்கப்படும் வரலாற்றினை வெளிக்கொண்டுவர முடிந்தவரை பகிருங்கள்..!! உங்களுடன் ஆதாரங்கள் இருந்தால் உடன் அனுப்புங்கள்..!!

செய்திகள்

பொது மக்களிடம் உதவி கோரல்.மிகவும் பழமையும் வரலாற்றுச் சிறப்பும் மிக்க வழிபாட்டு இடங்களை அடையாளப் படுத்தி பாதுகாக்கும் நோக்கில்,கீரிமலை புனிதப் பிரதேசத்தில் அல்லது அதற்கு அண்மையில் அமைந்துள்ள கீழ் குறிப்பிடப்படும் வழிபாட்டு இடங்கள் பற்றிய


வரலாற்று விபரங்கள் மற்றும் அதனுடைய சட்ட உரித்து ஆவணங்கள் வைத்திருப்பவர்கள் பற்றிய விபரங்கள்,
தங்களிடம் இருந்தால் அல்லது அது தொடர்பான நபர்களின் விபரங்கள் தங்களிற்கு தெரிந்திருந்தால் எமக்கு அறியத்தருமாறு தங்களை நாம் தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

01)ஆதி சிவன்,கிருஸ்னர் கோவில்,சடையம்மா சமாதி,கதிரையாண்டவர் கோவில்,உச்சிப் பிள்ளையார் கோவில்
குறிப்பிட்ட இவ் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ள வேண்டிய சில நிர்வாக ரீதியான நடவடிக்கைகளுக்கு குறிப்பிட்ட இவ் விபரங்கள் மற்றும் சட்ட உரித்து ஆவணங்கள் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதால் தங்களின் ஒத்துழைப்பினை நாம் மிக உயர்வாக வேண்டி நிற்கின்றோம்.

இவ் விடையத்தில் தாங்கள் எமக்கு வழங்கும் ஒத்துழைப்பிற்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.Telephone:-0212241726.Fax:-0212241726.E-Mail:-valinorthdso@gmail.com.WhatsApp:- +94212241726.Messenger:-dstellipalai