ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலையானது வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்தது.இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.இதனை தொடர்ந்து 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்து 150000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது சடுதியாக அதிகரித்துள்ளது.

இவ்வாறான சூழலில் இன்றைய தினம் 24 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 175,000 ரூபாவாக உள்ளது.அதேவேளை 22 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 161,000 ரூபாவாக பதவாகியுள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,460.00,24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 179,650.00,22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,590.00,22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 164,750.00,21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,660.00,21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 157,250.00
