இலங்கையில் அதிரடியாக குறைகிறது முச்சக்கர வண்டி கட்டணம்.!

செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் உடன் அமுலாகும் வகையில் எரிபொருளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதனால், அதற்கமைய முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைப்பதற்கு அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.அந்தவகையில், முதலாவது மற்றும் இரண்டாவது கிலோமீற்றர்களுக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.


இதன்படி, முதலாவது கிலோமீற்றருக்கு 100 ரூபாவும், இரண்டாவது கிலோமீற்றருக்கு 80 ரூபாவும் எனக் கட்டணம் அறவிடப்படவுள்ளது.இதற்கு முன்னர் முதலாவது கிலோமீற்றருக்கு 120 ரூபா மற்றும் இரண்டாவது கிலோமீற்றருக்கு 100 ரூபா என முச்சக்கரவண்டி கட்டணமானது அறவிடப்பட்டது.

இதேவேளை, வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை 15 லீற்றர்களாக உயர்த்தக் கோரி பல தடவைகள் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும், ஆனால் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.