விகாரையின் பெயராக மாறி வரும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பெயர்..!!

செய்திகள்

இலங்கையில் ஒடுக்குமுறையின், தமிழ் அடையாள அழிப்பின் பின்னணியில் தமிழ் இடங்களின் பெயர்கள் மாற்றப்படுகின்றன. எனவே இனியாவது தமிழர் அமைப்புகள், தமிழ் தேசியம் சார்ந்தவர்கள், தமிழ் புலமையாளர்கள், உணர்வாளர்கள் உங்கள் உங்கள் நாடுகளில் இருக்கும் கூகிள் தலைமையகங்களுக்கு சென்று, இலங்கையின் வரைபடத்தில் தமிழ் இடப்பெயர்கள் மாற்றப்படுவது குறித்து முறைப்பாடொன்றை செய்யுங்கள்.


இலங்கையில் எவ்வாறானதோர் ஒடுக்குமுறையின், தமிழ் அடையாள அழிப்பின் பின்னணியில் தமிழ் இடங்களின் பெயர்கள் மாற்றப்படுகின்றன என்பதை தெரிவியுங்கள்.குறைந்தபட்சம் இலங்கையில் கூகிள், பேஸ்புக் மாதிரியான டிஜிட்டல் தளங்கள் அதிகாரமுடைய அரசின் பின்னணியில் எவ்வாறு இன ஒடுக்குமுறையின் கருவிகளாகப் பயன்படுகிறது என்பதை அறிவியுங்கள்.

கீழ்வரும் பதிவை பகிருங்கள். வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பெயர் Google maps மாற்றப்பட்டுள்ளதற்கு எதிரான பல்வேறு வகையான நடவடிக்கைகளை அவதானிக்கிறேன்.அதிலேயே சில தவறுகளை நாங்கள் செய்கிறோம். ஒருவரை விட பதிவு தவறாக இருக்குமாயின் அது தவறானது என்பதை சுட்டிக்காட்டி குறித்த பதிவை அகற்றக் கோருவதே சரியான நடைமுறை. அதற்குரிய முறை பின்வருமாறு,


Go to Google maps -> search and open the place -> Suggest an edit -> Close/ Remove -> Offensive/ Harmful/ Misleading -> Upload an old image to prove our claim.ஆனால் நிறைய நண்பர்கள் தவறான அந்த பெயரிலுள்ள வரைபடப் பதிவிற்கு குறைந்த star rating கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.இவ்வாறு செய்வதன் மூலம் வரைபடப் பதிவினை நாங்கள் ஏற்றுக் கொண்டு அதன் சேவை சரியில்லை என்று மதிப்பிடுவதாகவே கொள்ளப்படும். எனவே வரைபட பதிவை அழிக்கும் முயற்சிக்கு எதிரான விளைவுகளை அது ஏற்படுத்தும்.-Jera Thampi