பணப்பையினை கொள்ளையடித்த திருடன் இறுதியில் செய்த காரியம்..!! இலங்கையில் சம்பவம்.!

செய்திகள்

திருடன் அனுப்பிய கடிதம்.உங்கள் பேர்ஸ் பழையது !புதிதாக ஒன்று வாங்குங்கள் !!பேர்ஸை இழந்தவருக்கு
திருடன் அனுப்பிய கடிதம்.இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில் பயணி ஒருவரின் பேர்ஸை ஒருவர் கொள்ளையிட்டுள்ளார்.


இந்நிலையில் பேர்ஸை இழந்த நபருக்கு கொள்ளையரிடமிருந்து கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.அந்தக் கடிதத்தில் தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளன. அதில் குறிப்பு ஒன்றும் எழுதி வைத்துள்ளார்.அந்த குறிப்பில் ,“உங்களை கடவுள் ஆசி வழங்கியுள்ளார். எனக்கு ஒரு பணத்தேவை இருந்தது. அதனால்தான் பணத்தை எடுத்தேன். இல்லை என்றால் பணத்தையும் திருப்பி அனுப்பியிருப்பேன். இந்த நேரத்தில் அது பெரிய உதவியாக இருந்தது.

அத்துடன் உங்கள் பேர்ஸ் மிகவும் பழையதாக இருந்தது. புதிதாக ஒன்று வாங்குங்கள். இல்லை என்றால் இந்த கடிதத்துடன் அதனையும் அனுப்பி வைத்திருப்பேன். நீங்கள் ஒரு தானம் செய்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். மிக்க நன்றி” என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.திருடனிடமிருந்து கிடைத்த கடிதம் மற்றும் தனது ஆவணங்களை பேர்ஸின் உரிமையாளர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்