புதனால் உருவாகும் தன் சாம்ராஜ்ய யோகம்..!! இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்..!

ஆன்மீகம்

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் கிரகங்கள் சில ராசியில் உச்சம் பெற்றும், சில ராசியில் நீசமடைந்தும் இருக்கும். இந்நிலையில் தற்போது மீன ராசியில் புதன் நீசமடைந்துள்ளார். அதோடு புதன் மீனத்தில் அஸ்தமன நிலையிலும் உள்ளார்.


இதனால் மீன ராசியில் புதனால் தன சாம்ராஜ்ய யோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது நல்ல பண வரவையும், அதிர்ஷ்டத்தையும் தரவுள்ளது. இப்போது புதனால் உருவாகும் தன சாம்ராஜ்ய யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் அந்த 4 ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு தன சாம்ராஜ்ய யோகமானது மங்களகரமானதாக இருக்கும். ஏனெனில் மிதுன ராசியின் அதிபதி புதன். எனவே இக்காலத்தில் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். சிக்கிய பணம் இக்காலத்தில் கைக்கு வரும். அரசு வேலை செய்பவர்களுக்கு, இக்காலகட்டம் நல்ல அதிர்ஷ்டமானதாக இருக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள்.

ரிஷபம்தன சாம்ராஜ்ய யோகமானது ரிஷப ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் பொருளார நிலையில் முன்னேற்றம் ஏற்படலாம். பண வரவு இக்கால கட்டத்தில் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும். பழைய முதலீடுகளால் இக்லத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. உங்களின் ஆசைகள் நிறைவேறக்கூடும்.


கன்னிதன சாம்ராஜ்ய யோகமானது கன்னி ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக அதிர்ஷ்டமானதாக இருக்கும். குறிப்பாக இக்காலத்தில் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையால் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகளால் நல்ல வெற்றியைக் காண்பீர்கள்.

தனுசுதனுசு ராசிக்காரர்களுக்கு தன சாம்ராஜ்ய யோகமானது தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல பலனைத் தரும். மேலும் புதனின் பார்வை 7 ஆவது வீட்டில் விழுவதால் தொழிலில் நல்ல வருமானத்தைப் பெறக்கூடும். சொத்து வாங்குவதற்கான வாய்ப்புக்கள் அமையும். இதுவரை தொழில் மந்தமாக இருந்தால், இனிமேல் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.