இலங்கையில் பேருந்து கட்டணம் குறைப்பது தொடர்பில் வெளியான மிக முக்கிய செய்தி.!

செய்திகள்

டீசல் விலை 10 ரூபாவோ அல்லது அதற்கும் குறைவாகவோ குறைக்கப்பட்டால் பேருந்து கட்டணத்தை குறைக்க வாய்ப்பு உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை நாடு பெற்றுள்ளதால், சீனாவில் இருந்து கீழ் தளங்களைக் கொண்ட (படிகள் இல்லாத) 50 சொகுசு பேருந்துகள் கொண்டுவரப்பட்டு கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இயக்கப்படும் என்றார்.


சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு அதிபர் விசேட தியாகத்தை மேற்கொண்டதாகவும் அதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் விஜேரத்ன தெரிவித்தார்.தற்போது நாட்டின் போக்குவரத்து துறைக்கு தேவையான பேருந்து சேவையை இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகள் வழங்குவதாகவும்,

அதனை பொருட்படுத்தாமல் சில அமைச்சர்கள் பேருந்துகளுக்கு வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வர முயற்சிக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.மேலும், போக்குவரத்துத் துறையில் அவ்வாறான தேவை இல்லை எனவும், இவ்வாறான சந்தர்ப்பத்தில், பேருந்து தொழிற்துறையை வீழ்ச்சியடையச் செய்யும் இவ்வாறான அமைச்சர்களின் முயற்சிகளை முறியடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.