எதிர்காலத்தில் அதிபுத்திசாலியாக வரப்போகும் குழந்தையிடம் இந்த அறிகுறிகள் இருக்குமாம்..!!

ஜோதிடம்

அனைத்து பெற்றோர்களுக்குமே தங்களின் குழந்தைகள் புத்திசாலிகளாகத்தான் தெரிவார்கள். ஆனால் அனைத்து குழந்தைகளும் புத்திசாலிகளாகவே வளர்வார்களா? என்று கேள்வி கேட்டால் நிச்சயம் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.அறிவார்ந்த குழந்தைகள் குழந்தைப் பருவத்திலேயே அதற்கான அறிகுறிகளை காட்டத் தொடங்குவார்கள். ஆனால் ஒவ்வொரு குழந்தையும் ஒரு திறமையுடன்தான் இருப்பார்கள் என்பதை பெற்றோர்கள் மறந்து விடக்கூடாது.


உங்கள் குழந்தைகளிடம் சில அறிகுறிகள் இருந்தால் அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த புத்திசாலியாக வருவார்கள் என்று அறிந்து கொள்ளலாம். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.அதிபுத்திசாலிகளாக இருக்கும் குழந்தைகள் சக்திவாய்ந்த நினைவாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் எதையும் எளிதில் கற்றுக்கொள்வார்கள் மற்றும் அவற்றை எளிதில் நினைவுகூறுவார்கள். அவர்கள் கற்றுக்கொண்டதை நீங்கள் எப்போது கேட்டாலும் சரியாகக் கூறும் நினைவாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

வாசிப்பு என்பது மனதிற்கு நாம் கொடுக்கும் உடற்பயிற்சியாகும். பெரும்பாலான குழந்தைகள் ஆறு அல்லது ஏழு வயதில்தான் சரளமாக படிக்கத் தொடங்குவார்கள், ஆனால் அதிபுத்திசாலியாக இருக்கும் குழந்தைகள் நான்கு வயதிற்கு முன்னரே படிக்கத் தொடங்குவார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது. உங்கள் குழந்தைகள் எத்தனை வயதில் படிக்கத் தொடங்குகிறார்கள் என்பதை கவனியுங்கள்.


குழந்தைகளின் ஆர்வமும் புத்திசாலித்தனத்தைப் போலவே முக்கியமானது. ஆர்வம் புத்திசாலித்தனத்திற்கான முக்கியமான அறிகுறியாகும். நிறைய கேள்விகள் கேட்கும் குழந்தைகள் கற்க வேண்டும் என்ற உள்ளார்ந்த விருப்பத்தை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் எங்கிருந்தாலும் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளைத் தேடுவார்கள்.

இசைக்கும், புத்திசாலித்தனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. இசையில் அதிக ஆர்வம் காட்டும் குழந்தைகள் அதிபுத்திசாலியாக இருப்பார்கள். சிறுவயதிலேயே ஏதாவது ஒரு இசைக்கருவியை கற்றுக்கொள்ளும் குழந்தைகள் எதிர்காலத்தில் பெரிய மேதைகளாக வருவார்கள்.


அதிபுத்திசாலியான குழந்தைகள் எப்போதும் பெரியவர்களுடன் அதிகமாக உரையாடுவார்கள். அவர்கள் தங்கள் வயது குழந்தையுடன் விளையாடுவதை விட தங்களை விட வயதில் மூத்தவர்களுடன் பேசவும், விளையாடவும் அவர்கள் விரும்புவார்கள்.வயதில் மூத்தவர்கள் மட்டுமல்ல புத்திசாலியான குழந்தைகளும் குறைவாகவே தூங்குவார்கள். உங்கள் குழந்தை அழாமல் அதேசமயம் அதிக நேரம் விழித்திருந்தால் அவர்கள் மற்ற குழந்தைகளைப் போன்றவர்கள் அல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.