ஏப்ரல் மாதம் முதல், பால் தேநீரின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பட்டுள்ளது.இதனை அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.தற்போது ஒரு கோப்பை பால் தேநீர் 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஏப்ரல் மாதத்தின் முதல் பகுதியிலிருந்து இறக்குதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.இதற்கிணங்க, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா விலை 200 ரூபாவாலும் 400 கிராம் பால்மா விலை 80 ரூபாவாலும் குறைக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் நேற்று அறிவித்தது.இதற்கமைவாகவே பால் தேநீரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
