இந்த 5 ராசிக்காரங்க இரண்டாவது திருமணம் பண்ண அதிக வாய்ப்பிருக்காம்..!!

செய்திகள்

ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் இந்திய பாரம்பரிய கலாச்சாரமாக இருந்துவருகிறது. திருமண உறவில் ஒருவர் இருக்கும்போது, வேறொரு திருமண உறவில் ஈடுபட பெரும்பலான மக்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால், தங்கள் திருமண உறவில் திருப்தியும், மகிழ்ச்சியும் மற்றும் இன்னும் பிற விஷயங்களும் இல்லாதபோது, அந்த உறவில் இருக்க விரும்பமாட்டர்கள்.


அந்த உறவை விட்டு வெளியேறி இரண்டாவது திருமணம் செய்துகொள்ள பலர் விரும்பலாம். பலர் தங்கள் கணவன் அல்லது மனைவியோடு இருந்தாலும் முழுமையற்றவர்களாக உணர்கிறார்கள். அவர்கள் தங்கள் மனைவியிடமிருந்து உணர்ச்சி ரீதியாகவும் மனரீதியாகவும் மிக தொலைவில் இருப்பதாக உணரலாம்.

ஒரு கட்டத்தில் உறவு சுமை தாங்க முடியாததாக மாறும் போது,​​விவாகரத்து கடைசி நிலையாக இருக்கும். பிறகு, ஆறுதல் தேடவும் வாழ்க்கையை வாழவும் இவர்கள் மீண்டும் ஒரு உறவில் இணைய விரும்பலாம். இதனால், இந்த மக்கள் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பார்கள். இரண்டாவது திருமணம் செய்யக்கூடிய ராசிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

ரிஷபம்ரிஷப ராசிக்காரர்கள் உறவுகளில் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள். ஆதலால், உறவுகளின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு இவர்கள் முன்னுரிமை அளிப்பார்கள். அவர்களின் முதல் திருமணம் அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்றால், அவர்கள் விரும்பும் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை வழங்கக்கூடிய ஒரு துணையைத் தேடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் குறைவாகத் திருப்தி அடைய மாட்டார்கள்.


துலாம்துலாம் ராசிக்காரர்கள் தங்கள் உறவுகளில் நல்லிணக்கத்தையும் சமநிலையையும் மதிக்கிறார்கள். அவர்களது முதல் திருமணம் அவர்கள் விரும்பும் சமநிலையையும் நல்லிணக்கத்தையும் அவர்களுக்கு வழங்கவில்லை என்றால், அவர்கள் இரண்டாவது திருமணத்தை நோக்கி செல்ல வாய்ப்புள்ளது. அந்த உறவில் அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் பெற அவர்கள் விரும்புவார்கள்.

விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்கள் தீவிர உணர்ச்சி கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள். தங்கள் துணை எந்த விஷயத்திற்கும் பாராட்ட வேண்டும், தங்கள் திறனை பெருமையாக நினைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அவர்கள் தங்கள் முதல் திருமண உறவில் பாராட்டப்படவில்லை என்று உணர்ந்தால், இந்த ராசிக்காரர்கள் நிச்சயமாக இரண்டாவது திருமணத்தில் தங்கள் ஆர்வத்துடன் பொருந்தக்கூடிய ஒரு துணையைத் தேடுவார்கள்.


தனுசுதனுசு ராசிக்காரர்கள் சுதந்திரத்தை அதிகமாக மதிக்கிறார்கள். பாரம்பரிய கலாச்சார திருமண உறவில் அவர்களின் சுதந்திரம் பறிபோகலாம். இதனால், அந்த திருமண உறவில் இருக்க அவர்கள் சிரமப்படலாம். இந்நிலையில், இந்த ராசிக்காரர்கள் தங்கள் முதல் திருமண உறவு தங்கள் சுதந்திரத்திற்கு தடையாக இருப்பதாக உணர்ந்தால், அவர்கள் சுதந்திரமாக உணரக்கூடிய மற்றொரு துணையைத் தேடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கும்பம்கும்ப ராசிக்காரர்கள் தங்கள் உறவுகளில் தனித்துவத்தை எப்போதும் மதிக்கிறார்கள். அவர்களது முதல் திருமணம் தங்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தவோ அல்லது தங்கள் நலன்களைப் பின்தொடரவோ இல்லை என்று அவர்கள் கருதினால், அந்த உறவை விட்டு விலகிவிடுவார்கள். அதைத்தொடர்ந்து, இந்த ராசிக்காரர்கள் தங்கள் மதிப்புகள் மற்றும் ஆர்வங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒருவருடன் இரண்டாவது திருமணத்தில் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகம்

இதர ராசிக்காரர்கள்மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் தங்கள் முதல் திருமணத்தில் மிகவும் உறுதியாக உள்ளனர். என்ன நடந்தாலும் தங்கள் திருமண உறவில் உறுதியாகவும், துணைக்கு துணையாக நிற்பார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் திருமணத்தைத் தக்கவைக்க கடினமாக உழைப்பார்கள். இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர்களின் மனதில் தோன்றவே தோன்றாதாம்.