க.பொ த உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை தொடர்பில் மாணவர்களுக்கு வெளியான முக்கிய செய்தி.!

செய்திகள்

2022ஆம் ஆண்டுக்கான க.பொ த உயர்தரப் பரீட்சையின், செயன்முறைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.இதன்படி, எதிர்வரும் 28ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரை இந்த செயன்முறைப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மனைப்பொருளியல், பரதநாட்டியம், கீழைத்தேய, மேலைத்தேய மற்றும் கர்நாடக சங்கீதம், நாடகமும் அரங்கியலும்

முதலான பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் குறித்த காலப்பகுதியில் நடைபெறவுள்ளன.பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக, பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்திலும் அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.மேலதிக தகவல்களுக்கு,1911 அல்லது 0112 784 208 அல்லது 0112 784 537 அல்லது 0112 786 616 முதலான தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.