இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் தங்க விலை! தற்போது வெளியான செய்தி.!

செய்திகள்

நாட்டில் கடந்த சில நாட்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் உயர்ந்துள்ளதன் காரணமாக தங்கத்தின் விலையிலும் வீழ்ச்சி பதிவாகியிருந்தது.இவ்வாறான நிலையில், நேற்றைய தினம் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்தது.


டொலரின் மதிப்பு சரிந்ததால் தங்கப் பவுணிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த நாட்களை விட நேற்றையதினம் தங்கத்தின் விலை 10,000 ரூபாவால் குறைந்திருந்தது.

இந்த நிலையில், நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் தங்கத்தின் விலையில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது,அதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 177,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 162,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 155,150 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.இருப்பினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.