ஆசிரியர் சேவைக்கான போட்டிப்பரீட்சை தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு.!!

செய்திகள்

அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப்பரீட்சை நாளை மறுதினம் இடம்பெறமாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.சீ.அமித் ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.


குறித்த போட்டிப்பரீட்சை எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறவிருந்த நிலையில்,உயர் நீதிமன்றத்தின் கட்டளையின் அடிப்படையில் இந்தப் பரீட்சை இடம்பெறமாட்டாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் கிடைக்கப்பெறவுள்ள உயர்நீதிமன்றின் தீர்மானத்தின் பிரகாரம் குறித்த பரீட்சை மீண்டும் நடத்தப்படும் திகதியை பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.