700 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் 5 ராஜயோகங்கள்..!!இந்த 4 ராசிக்கு பணம் கொட்டோ கொட்டுமாம்.!

செய்திகள்

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது சில சமயங்களில் யோகங்கள் உருவாகும். இப்படி உருவாகும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் மங்களகரமான யோகம் ஒருவரது வாழ்வில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 700 ஆண்டுகளுக்கு பின்னர் மார்ச் மாதத்தில் 5 ராஜயோகங்கள் உருவாகின்றன. அவை கேதார், மாளவியா, சதுஷ்சக்ரா, மகாபாக்யா மற்றும் ஹன்ஸ் போன்றவை ஆகும்.


இந்த 5 சுப யோகங்களின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் இந்த மங்களகரமான சுப யோகங்களால் பணக்காரராகும் வாய்ப்பைப் பெறுவதோடு, அவர்களின் மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கப் போகிறது. இப்போது 700 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் 5 ராஜயோகங்களால் நற்பலனைப் பெறும் அந்த 4 அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

2023 மார்ச் மாத கிரக நிலைகளால், முதலாவதாக உருவான ராஜயோகம் தான் கேதார் ராஜயோகம். இந்த ராஜயோகமானது 7 நவகிரகங்கள், 4 ராசிகளில் இருக்கும் போது உருவாகும். அந்த வகையில், சூரியன், புதன், சனி, குரு, சுக்கிரன், ராகு மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் கும்பம், மீனம், மேஷம், ரிஷபம் ஆகிய ராசிகளில் இருப்பதால், கேதார் ராஜயோகம் உருவானது.

ஏற்கனவே குரு மீன ராசியில் இருப்பதால் ஹன்ஸ் ராஜயோகம் உருவானது. அதன் பின் சுக்கிரன் குருவுடன் மீன ராசியில் இணையும் போது மாளவியா ராஜயோகம் உருவானது. இது தவிர சதுஷ்சக்ர ராஜயோகம் பொருந்தும். பின்பு சூரியன் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் மகாபாக்யா ராஜயோகம் உருவாகவுள்ளது.இப்படி மார்ச் மாதத்தில் 5 ராஜயோகங்கள் உருவாவதால், 4 ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும். இப்போது அந்த ராசிக்காரர்களைக் காண்போம்.


மிதுனம்இந்த 5 ராஜயோகங்களின் உருவாக்கத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டமானதாக இருக்கும். உங்களின் கனவுகள் நனவாகும் வாய்ப்புள்ளது. கடின உழைப்பிற்கான முழு பலனும் கிடைக்கும். செய்யும் வேலைகளில் மிகப்பெரிய வெற்றிகளைக் காண்பீர்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் மற்றும் திடீர் பண வரவிற்கான வாய்ப்புக்களும் உள்ளன. வேலை இல்லாதவர்கள் அல்லது வேலையை மாற்ற நினைத்துக் கொண்டிருப்பவர்கள், நல்ல வேலையைப் பெறக்கூடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களின் செயல்திறனால் நல்ல பாராட்டையும், பணியிடத்தில் முன்னேற்றத்தையும் காண்பார்கள்.

கடகம்இந்த 5 ராஜயோகங்களால் கடக ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறுவார்கள். குறிப்பாக இக்காலத்தில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும் எதிர்பாராத வகையில் பல நிதி நன்மைகள் கிடைக்கும். தொழிலில் நல்ல வருமானமும், முன்னேற்றமும் ஏற்படும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். வியாபாரம் செய்பவர்கள், தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வேலை தொடர்ன பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது மற்றும் அந்த பயணங்களால் நல்ல ஆதாயமும் கிடைக்கும். முக்கியமாக மாணவர்கள் இக்காலத்தில் நல்ல பலனைப் பெறுவார்கள்.

கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு இந்த 5 ராஜயோகங்களின் உருவாக்கமானது நல்ல லாபத்தை அள்ளித் தரும். உங்களின் வாழ்க்கைத் துணையின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். மேலும் உங்கள் வாழ்க்கைத் துணையும் அவர்களின் தொழிலில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். இக்காலத்தில் தம்பதிகளுக்கு இடையேயான காதல் அதிகரிக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையைப் பெறலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். வணிகர்களுக்கு பெரிய லாபத்தைத் தரக்கூடிய புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.


மீனம்மீன ராசிக்காரர்களுக்கும் இந்த 5 ராஜயோகங்களின் உருவாக்கமானது நல்ல சாதகமான பலன்களைத் தரும். முக்கியமாக இக்காலத்தில் உங்களின் தைரியமும், மரியாதையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையால் பாராட்டைப் பெறுவார்கள் மற்றும் சரியான நேரத்தில் தங்களின் இலக்குகளை வெற்றிகரமாக அடைவார்கள். வியாபாரம் செய்து கொண்டவர்கள் நல்ல லாபத்தைக் காண்பார்கள் மற்றும் ஒரு பெரிய தொகையைப் பெறவும் வாய்ப்புள்ளது. நிலுவையில் உள்ள வேலைகள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். உங்களின் அந்தஸ்து அதிகரிக்கும். சுருக்கமாக கூற வேண்டுமானால், இந்த ராஜயோகங்கள் பணிபுரிபவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும்.