தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை மிகக்குறுகிய நேரங்களில் ஒன்றாக நீந்திக் கடந்து சாதனை படைத்த 7 பேர்..!! குவியும் வாழ்த்துக்கள்.!

செய்திகள்

இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்குநீரிணையை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் ஒன்றாக நீந்திக் கடந்து சாதனை படைத்த 7 பேர்.இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் அமைந்துள்ள திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளையை சேர்ந்த பிரசாந்த் ராஜண்ணா, ராஜசேகர் துபரஹள்ளி, ஜெயப்பிரகாஷ் முனியல் பாய், அஜத் அஞ்சனப்பா ஆகிய 4 வீரர்களும் சுமா


ராவ், சிவரஞ்சனி கிருஷ்ணமூர்த்தி, மஞ்சரி சாவ்ச்சாரியா ஆகிய 3 வீராங்கனைகளுமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதுறையிலிருந்து 2 படகுகளில் நீச்சல் பயிற்சியாளர் சுஜேத்தா தேப் பர்மன் தலைமையில் மீனவர்கள் உட்பட 16 பேர் கொண்ட குழுவினர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தலைமன்னார் நோக்கி பயணித்தனர்.

தலைமன்னாரிலிருந்து நேற்று(13) அதிகாலை 5 மணிக்கு கடலில் குதித்து நீந்த ஆரம்பித்த 7 பேரும் மாலை 3.45 அளவில் (10 மணி நேரம் 45நிமிடங்கள்) தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியை அடைந்து சாதனை ஏட்டில் பதிவாகினர். இதற்கு முன்னர் தலைமன்னார் – தனுஷ்கோடி


இடையிலான பாக்குநீரிணையை 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேனி மாவட்டத்தை ஆர். ஜெய் ஜஸ்வந்த் தனது 10 வயதிலும் 2022 ஆம் ஆண்டில் மும்பையைச் சேர்ந்த ஜியா ராய் என்ற ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி உள்ளிட்ட சிலர் குறைந்த வயதுகளில் நீந்தி கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.