இந்த 6 கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சா நீங்க தான் கில்லாடி!

செய்திகள்

வலுவான உறவில் இருக்கும் காதல் ஜோடிகள் தங்களது துணையை பற்றி புரிந்து கொள்கிறார்கள், அவர்களது விருப்பு வெறுப்புகளை பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள். மேலும் அவர்களது சந்தோஷமான வாழ்க்கைக்கு இது ஆதாரமாக இருக்கிறது.உங்களால் இந்த அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமானால், நீங்கள் ஆரோக்கியமான உறவில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அப்படி பதிலளிக்க முடியவில்லை என்றால் உங்கள் உறவுவில் காதல் இல்லை என்று அர்த்தம் இல்லை. நீங்கள் உங்கள் காதலை இன்னும் வலிமையாக்கிக்கொள்ள இது உறுதுணையாக இருக்கும்.


உங்கள் துணையை வருத்தப்பட வைக்கும் விஷயம் எது?இதற்காக பதிலை நீங்கள் உங்களது கடந்த காலத்தில் இருந்து பெற முடியும். அவர் எதை பற்றி பேசினால் காயப்படுவார். எதை நினைத்து உங்கள் துணை வருத்தப்படுவார் என்ற விஷயங்களை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.அவரை காயப்படுத்தும் விஷயங்களை நினைவுபடுத்தவோ அல்லது பேசாமலோ இருப்பது சிறந்தது.

உங்கள் துணையின் சேமிப்பு தொகை எவ்வளவு?நிறைய தம்பதிகள் பண பிரச்சனையால் தங்களது உறவை முறித்துக்கொள்கிறார்கள். எனவே தம்பதிகள் தங்களது நிதி நிலை, வருங்கால திட்டங்கள், எது தேவை எது தேவையில்லை என்பதை ஒருவருக்கொருவர் கலந்து பேசி முடிவெடுப்பது சிறந்தது.

உங்கள் துணையால் சகித்துக்கொள்ள முடியாத விஷயம் என்ன?நீங்கள் செய்த ஒரு தவறை உங்கள் துணையால் சகித்துக்கொள்ளவே முடியாமல் இருக்கும். உதாரணமாக சண்டைகளின் போது வரம்பை மீறி அடிப்பது போன்றவற்றை உங்களது துணையால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்றால், மீண்டும் இது போன்ற தவறை செய்து அவரது வெறுப்பை தேடிக்கொள்ளாதீர்கள்.


குழந்தைகள் பற்றிய உங்கள் துணையின் திட்டங்கள் என்ன?குழந்தைகள் பற்றிய திட்டங்கள் குறித்து பெரும்பான்மையானோர் ஆலோசனை செய்வதே கிடையாது. எப்போது குழந்தை பெற்றுக்கொள்ளலாம், முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்குமான இடைவெளி, குழந்தை பெற இது சரியான சமயமா என்பது போன்ற முக்கிய விஷயங்களை தம்பதிகள் ஒன்றாக ஆலோசனை செய்து முடிவெடுப்பது அவசியம்.

திருமண உறவில் முழுமையாக இணைய இருவருக்கும் சம்மதமா?திருமண உறவு என்பது ஆண்டாண்டு காலம் நீடித்து உழைக்கும் ஒரு பந்தம். இது கணவன் மனைவி இருவர் சம்மந்தப்பட்டது மட்டுமல்ல. திருமணத்திற்கு பின்னர் உங்கள் துணைக்கு அனைத்து விஷயங்களிலும் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். வேலை மற்றும் பிற விஷயங்களிலேயே எந்த நேரமும் மூழ்கி இருக்காமல், திருமண உறவுக்கு முன்னுரிமை கொடுத்து, தனது கடமைகளை செய்ய வேண்டியது அவசியம்.


உங்கள் துணை கஷ்டத்தில் இருக்கும் போது என்ன செய்வீர்கள்?உங்கள் துணை ஏதேனும் மன கஷ்டத்தில் இருக்கும் போது அவரது மன கஷ்டத்தை போக்க நீங்கள் எவ்வாறு நடந்துகொள்வீர்கள்? நீங்கள் என்ன செய்தால் அவர் அந்த கஷ்டத்தில் இருந்து வெளியே வருவார் என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.இதில் சில கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்றால் பிரச்சனை ஏதுவும் இல்லை. உங்கள் துணையுடன் அமர்ந்து பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுங்கள் போதும்.